Asianet News TamilAsianet News Tamil

உதயநிதிக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கியது பாராட்டுக்குறியது..! சிறப்பாக செயல்படுவார்- செல்லூர் ராஜூ நம்பிக்கை

 தி.மு.க அரசு விளையாட்டுத்துறைக்கு  இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இது பாராட்டுக்குறிது. இதனால் விளையாட்டுத் துறைக்கு  நிறைய செய்வார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

Sellur Raju said that the allocation of sports department to Udayanidhi is commendable
Author
First Published Jan 3, 2023, 8:00 AM IST

கபாடி போட்டிக்கு வீரர்கள்  தேர்வு

உலகளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபாடிப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்வதற்காக இந்திய விளையாட்டு வீரர்களை அமைச்சூர் கபாடிக் குழு சார்பாக தேர்வு செய்யும் கபாடிப்  போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரையில்  இந்த கபாடிப் போட்டி நடைபெறுவது மிகப்பெரிய பெரும் மகிழ்ச்சி என கூறினார்.  அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் 252 பேர் கலந்துகொண்டுள்ளதாகவும், இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி ஈரானில் நடைபெறும் உலக கபாடிப் போட்டியில் விளையாட உள்ளதாக தெரிவித்தார். 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை என்ற துறை எதற்காக? திமுக அரசை விளாசும் அண்ணாமலை!!

Sellur Raju said that the allocation of sports department to Udayanidhi is commendable

உதயநிதி சிறப்பாக செயல்படுவார்

இந்தியா சார்பில்  30 பேர் தேர்வு செய்யப்பட்டு, 12 நபர்கள் விளையாட செல்வார்கள். இதில் தமிழர் ஒருவரும் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெறும் இந்த தேர்வு போட்டிக்கி தமிழக நிதி அமைச்சர்  உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அது பாராட்டுக்குறியது. ஒவ்வொரு அரசும் விளையாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க  வேண்டும். அம்மாவின் அரசும், எடப்பாடியார் அரசும் பல்வேறு நிதிகளை விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல் இட ஒதுக்கீடுகளையும் கூடுதலாக வழங்கினர். தற்போது   ஆட்சியில் உள்ள தி.மு.க., அரசு விளையாட்டுத்துறைக்கு  இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இது பாராட்டுக்குறிது. இதனால் விளையாட்டுத் துறைக்கு  நிறைய செய்வார்கள். கூடுதலாக விளையாட்டு  ஸ்டேடியங்கள் இருக்க வேண்டும். இதற்காக சட்ட மன்றத்தில் குரல் கொடுப்பேன் என கூறினார். 

இதையும் படியுங்கள்

வக்கிர புத்தி.. எந்த காலத்திலும் திமுக காரனுங்க திருந்தவே மாட்டானுங்க.. பெண் போலீசுக்கே பாலியல் தொல்லை! டிடிவி

Follow Us:
Download App:
  • android
  • ios