மதுரையில் செய்திளார்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்குழாயில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க அரசு அனைத்து நடவடிக்கையையும் எடுத்தது. ஆனால் அந்த குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை என்ற வேதனை முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்குமே உள்ளது.

ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்தில் அரசின் நடவடிக்கையை பாராட்டிவிட்டு தற்போது குறைகூறி வருகிறார். 

அவர் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வது எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துக்கு நல்லதல்ல. அரசின் நடவடிக்கையை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது என தெரிவித்தார்..

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இனி உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள் என்று சொல்ல மாட்டார், ஏனென்றால் இடைத் தேர்தல் தோல்வி அவருக்கு சரியான பாடம் கத்தக் கொடுத்துள்ளது என அமைச்சர் கிண்டல் செய்தார்.