காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 24 வது பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாடிக்கையாளர்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு .

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தனக்கு செல்வாக்கு கூடி இருப்பதாக கூறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் தனித்து நிற்க தயாரா? என்று கேள்வி எழுப்பினார். 

வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக எந்த ஒரு கட்சியும் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில் அதிமுக கட்சி, ஜெட் வேகத்தில் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. 

மேலும், இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தந்தது நம்ம அதிமுக அரசு தான் என்றும் கூறினார்.  திமுக கூட்டணியில் மதிமுக, விசிக, காங்கிரஸ் கட்சி மற்றும் இதர கட்சிகள் பங்கேற்க உள்ள நிலையில் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு திமுக தரப்பிலிருந்து என்ன பதில் கிடைக்குமென்று பார்க்கலாம்.