sellur raju confirms that there is no splits in admk
அதிமுகவில் பிரிவினை என்பது இல்லை எனவும் ஒரே இயக்கமாகத்தான் உள்ளது உள்ளது எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து ஓபிஎஸ் அணி தனி ராஜாங்கம் நடத்தி வந்தது.
ஒபிஎஸ் அணியை எடப்பாடி அணி பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வந்தது.
இதனால் ஒபிஎஸ் பேச்சுவார்த்தை தோல்வி எனவும் அணிகள் இணையாது எனவும் அறிவித்தார். இதனிடையே ஓபிஎஸ் அணியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எடப்பாடி தரப்பினர் சொல்லி வந்தனர். அதன்படி தினகரனை முற்றிலும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

மேலும், நேற்று ஜெ மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கபடும் எனவும், வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.
இதையடுத்து இன்று மாலை ஒபிஎஸ் தமது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அமைச்சர்கள் 2 பேர் ஒபிஎஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவில் பிரிவினை என்பது இல்லை எனவும் ஒரே இயக்கமாகத்தான் உள்ளது உள்ளது எனவும் தெரிவித்தார்.

அதிமுக அணிகள் இணைவதே 1 கோடி தொண்டர்களின் விருப்பம் எனவும், அவர்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும் எனவும் தெரிவித்தார்.
இரட்டை இலையை மீட்டு வருகிற பாராளுமன்ற தேர்தலையும், அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்தித்து வெற்றி பெறுவோம் எனவும், செல்லூர் ராஜு குறிப்பிட்டார்.
