sellur raju condemns rajini speech

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் இன்று அதிகம் விமர்சிக்கப்படும் ஹிட் லிஸ்டில் நடிகர் ரஜினிகாந்தே தொய்வில்லாமல் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறார்.... ஏற்ற இறக்கங்களுக்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நெட்டிசன்கள் தொடங்கி, சட்டமன்ற மாண்புமிகுக்கள் வரை அனைவரும் ரஜினியை டார்க்கெட்டாக கொண்டு அடித்து தட்டி வருகின்றனர்.

இந்த வரிசையில் இன்றைய லேட்டஸ்ட் என்ட்ரி, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், தெர்மாகோல் புகழுமான செல்லூர்ராஜூ.....ரஜினி மீது இவர் வைத்திருக்கும் விமர்சனங்கள் அனைத்தும் பகீர் ரகம்.

 நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரை வந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்துப் பேசிய செல்லூர் ராஜூ, எடுத்த எடுப்பிலேயே ரஜினியை ஒரு வியாபாரி என்று விமர்சித்தார். " ரஜினி ஒரு வியாபாரி.இன்று ஒன்று சொல்லுவார். நாளை ஒன்று பேசுவார். நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்து விட்டனர். தமிழகத்தில் எந்த சிஸ்டமும் கெட்டுப் போகவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.....