Asianet News TamilAsianet News Tamil

இந்துக்கள் விபச்சாரி வீட்டு பிள்ளைகளா..? கோயில் கோயிலாக போகும் துர்கா, சபரீசன் யார்..? செல்லூர் ராஜூ கேள்வி

தி.மு.க ஆட்சியை பார்த்து கோவப்படக்கூடாது. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் பிரகாஷ் ராஜ் கோவம் வந்தால் சிரிப்பார். அதைப் போல் தி.மு.க ஆட்சியை பார்த்து கோவப்படாமல் சிரித்துவிட வேண்டும். இல்லை என்றால் பிரஷர் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்
 

Sellur Raju accused Tamil Nadu Chief Ministers of acting like puppets
Author
First Published Sep 16, 2022, 5:09 PM IST

திமுகவை விரட்டி அடிக்கும் பெண்கள்

 மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் ஜான்சி ராணி பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்  தி.மு.க.,விற்கும் அண்ணாவிற்கு என்ன சம்மந்தம், அண்ணாவின் கொள்கையை குழி தோண்டி புதைத்தவர்களே தி.மு.கவினர் தான். ஆனால் தற்போது திராவி மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில்  தி.மு.க., விபத்தில் ஜெயித்துவிட்டார்கள். 3 லட்சம் ஓட்டில் ஆட்சி மாறிவிட்டது. அடுத்த முறை அதிமுக அமோகமாக வெற்றி பெரும் என தெரிவித்தார்.  திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. மக்களை தேடிய மருத்துவத்தை கூட திமுக முறையாக செயல்படுத்தவில்லை. பெண்களுக்கு ஆயிரம் கொடுக்கவில்லை என்றால் திமுகவை ஊருக்கு, ஊரு விரட்டி விடுவார்கள் என தெரிவித்தார்..

நீங்க கால்வச்ச கட்சியெல்லாம் ஒன்னும் இல்லாம போச்சு.. ஆளவிடு சாமி,பண்ருட்டியாரை ரோட்டில் போட்டு புரட்டிய இபிஎஸ்

Sellur Raju accused Tamil Nadu Chief Ministers of acting like puppets

ஆ.ராசாவை நீக்கியிருக்க வேண்டும்

தி.மு.க ஆட்சியில் கட்சியும் கன்ட்ரோல் இல்லை, ஆட்சியும் கன்ட்ரோல் இல்லை. இந்துக்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதற்கு இந்நேரம் கட்சியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். இந்துக்கள் விபச்சாரி வீட்டுப் பிள்ளைகள் என்று ஆ.ராசா பேசியுள்ளார். தினமும் கோவில் கோவிலாக செல்கிறாறே முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர் விபச்சாரி விட்டு பிள்ளையா??? இதை கேட்பீர்களா???. ஆ.ராஜாவை இந்நேரம் கட்சியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் பொம்மை மாதிரி,  நவராத்திரியில் வைப்பாங்களே அந்த பொம்மை போல்  ஒவ்வொரு மாவட்டமாக  சென்று போஸ் கொடுக்கிறார்.

Sellur Raju accused Tamil Nadu Chief Ministers of acting like puppets

ஸ்டாலினை இயக்கும் சபரீசன்

தி.மு.க ஆட்சியை பார்த்து கோவப்படக்கூடாது. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் பிரகாஷ் ராஜ் கோவம் வந்தால் சிரிப்பார். அதைப் போல் தி.மு.க ஆட்சியை பார்த்து கோவப்படாமல் சிரித்துவிட வேண்டும். இல்லை என்றால் நமக்கு பிரஷர் ஏற்படும். ஆட்சி அதிகாரத்தில் முதல்வர் தலையீடுவதே இல்லை, தமிழக முதல்வர்  ஸ்டாலினை இயக்குவது மருமகன் சபரீசன், டிவி, போட்டோக்கு போஸ் கொடுங்கள் என முதல்வர் ஸ்டாலினை சபரீசன்அ னுப்பி வைத்து விடுகிறார். முதல்வர் மகன்  உதயநிதி சினிமாத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் செல்லூர் ராஜூ கிண்டலாக விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

திமுக அரசில் லஞ்சம் இல்லாத துறை எது..? ரூ. 1 கோடி பரிசு...ஸ்டாலினை அதிரவைத்த மாஜி அமைச்சரின் கணவர்
 

Follow Us:
Download App:
  • android
  • ios