(அண்ணே கொஞ்சமாச்சும் யோசிச்சு பேசமாட்டீங்களா அல்லது யோசிச்சா இப்படியெல்லாம் பேசமுடியாது அதனால அடிச்சு விடுவோமுன்னு நினைச்சுதான் பேசுறீங்களா? அந்தம்மா தெலுங்கானா கவர்னரானா நமக்கு என்ன பயன் கிடைக்க போகுது? தவிச்ச வாய்க்கு தண்ணீர் தருமா தெலுங்கானா! அது சாத்தியம்னா அதே பா.ஜ. கேரளாவில் நியமிச்சிருக்கிற தமிழரான கவர்னர் சதாசிவம் இதுவரைக்கும் தண்ணீர் தாவா எதையாச்சும் தீர்த்து வெச்சாரா?)

தமிழகத்தில் நாற்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் நிலைகள் உள்ளன. இவற்றில் அரசு தூர் வாரல் பணிகளை செய்யாத நீர் நிலைகளில் தி.மு.க. இளைஞர் அணியினர் தூர் வாரி சீரமைப்பர்:    உதயநிதி. 

(இப்படித்தான் உங்க அப்பா குளங்களை சுத்தம் பண்ணினார், உடனே இ.பி.எஸ். குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமா கொடுத்து அதை விட பெரிய பேர் வாங்கினார். இப்ப உங்க டர்னா? நடத்துங்க தம்பி, நடத்துங்க.)

சில விஷயங்கள் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தி, நல்ல முடிவை தெரிவிப்பர். அப்போது அதில் நடிகர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம் பெறும்:    செல்லூர் ராஜூ

(அண்ணே நடிகர்களின் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டு வரப்படுகிற திட்டம் மட்டும் ஓ.கே.யாச்சுன்னு வையுங்க நீங்க ஸ்டிரெய்ட்டா மக்கள் தலைவர் ஆகிடுவீங்க. அவனவன் கடுப்பேறி காய்ஞ்சு கிடக்குறது இந்த ஹீரோக்களின் தாறுமாறான பணக்கொழிப்பை பார்த்துத்தான்.)

சி.பி.எஸ்.இ., ஆறாம் வகுப்பு சமூகவியல் பாட புத்தகத்தில் சட்ட மேதை அம்பேத்கர் குறித்து இழிவான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் பாட புத்தகத்தை தீயிட்டு கொளுத்துவோம்:    ஜெயக்குமார். 

(தல, அம்பேத்கரை இழிவு படுத்தியதற்கு மிக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறதில் இரண்டாவது கருத்தே கிடையாது. ஆனா படிக்கிற புத்தகத்தை தீயிட்டு கொளுத்துவோம்னு சொல்றது என்ன மாதிரியான அரசியல்? 

தி.மு.க. எனும் திமிங்கலம், அ.தி.மு.க.வை ஸ்வாகா செய்ய காத்திருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. எனும் விலாங்கு மீன் அதனிடம் சிக்காது, விளையாட்டு மட்டுமே காட்டி அலையவிடும்:    ஜெயக்குமார். 

(ஆக, தி.மு.க.வை அதாவது ஸ்டாலினை திமிங்கலம்னு பெரிய அளவுல புகழ்ந்திட்டீங்க போங்க. இது ஒண்ணு போதுமே, இன்னும் ஒரு வருஷத்துக்கு ‘தலைவரை புகழ்ந்த அமைச்சர்’ன்னு அவிய்ங்க உங்களை வெச்சு செய்யப்போறாங்க பாஸு)