ஸ்டாலின் பிறந்த நாள் முகாமில் சேகர் பாபு ஆடிய ஆவேச தாண்டவம்தான் இப்போது சென்னை தி.மு.க.வின் ஹாட்டஸ்ட் டாபிக். 

வரும் 1-ம் தேதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள். இதையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு ஏகத்துக்கும் நிதி வசூல் பண்ணி, எக்கச்சக்க நிகழ்ச்சிகளை நடத்தி, தலைமையிடம் தன் கெத்தை காட்ட முயல்கிறாராம். ஆனால் அதே வேளையில் இந்த பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பாக பெண்களுக்கு ரத்தசோகை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. தி.மு.க. மருத்துவரணி சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு பாபுவிடம் பர்மிஷன் வாங்கவில்லையாம். 

இருந்தாலும், என்னை தாண்டி எவண்டா நிகழ்ச்சி நடத்துறது?!ன்னு சொல்லி அங்கே போயிருக்கிறார். அப்போது தி.மு.க.வின் மகளிரணி துணைச்செயலாளர் குமரி விஜயகுமார் அங்கே நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் ‘நீ எதுக்கு இங்கே வந்த?’ என்று அர்ச்சித்தாராம் பாபு. அதற்கு அந்த லேடியோ ‘ரிக்‌ஷா வண்டி ஓட்டிக்கினு இருந்த ஆளு நீ. நீயெல்லாம் என்னை சொல்றியா? நீயெல்லாம் ஒரு தலைவனா!’ என்று எகிறியிருக்கிறார். 

உடனே கட்சி நிர்வாகிகள் சிலரை பார்த்து ‘ஏம்பா! அந்த பொம்பள அம்மாம் சவுண்டு வுடுறா ஒரு மாவட்ட செயலாளர பார்த்து. நீங்க இன்னா பண்ணினுகிறீங்க?’ என்று பாபு உசுப்பேற்ற, சிலர் குமரியை அப்புறப்படுத்த முயன்றனராம். அதற்கு ‘ஒரு பொம்பளன்னு கூட பார்க்காம அந்தாளு கேவலமா சவுண்டு வுடுறாரு. அத்த தட்டிக்கேட்காம என்னய வெளியில அனுப்ப வர்றீங்களா? எம் மேல கைய வெச்சா, அவ்ளோதான்!’ என்று பதிலுக்கு குமரி குமுறியிருக்கிறார். 

அவ்வளவுதான் சேகர் பாபுவுக்கு ஆதரவாக வந்தவர்கள் தெறித்துவிட்டார்கள். அவர்களுக்கு முன்னாடியே சேகர் பாபுவும் எஸ்கேப்பாகி விட்டாராம். 

பெண் நிர்வாகியிடம் தான் மல்லுக்கு நின்னதை ஸ்டாலினிடம் எப்பாடாவது பட்டு மறைக்க சேகர் பாபு முயல, எதிரணியோ இதை எப்படியாவது தளபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று, பாபுவுக்கு ரிவிட் வைக்க துடிக்கிறது. 

என்னாகுமோ!?