Asianet News TamilAsianet News Tamil

எதையோ பார்த்து ஏதோ குறைக்கிறது... ஹெச்.ராஜாவை நாயுடன் ஒப்பிட்ட சேகர் பாபு..!

இதுவரை 4500 குறைகள் வந்துள்ளன. மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம். விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

Sekar Babu compares H. Raja to a dog ..!
Author
Tamil Nadu, First Published Oct 12, 2021, 1:22 PM IST

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான நிலம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் மீட்கப்பட்டது. Sekar Babu compares H. Raja to a dog ..!

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான  ஆக்கிரமிப்பு நிலம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் இன்று அறநிலையத்துறை வசம் கையகப்படுத்தப்பட்டது

இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடங்கள் இதுவரை 132 கிரவுண்டு இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி உள்ளது. இன்று 250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலைய துறை தன்வசபடுத்தி உள்ளது. முறையாக 78 நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தி உள்ளோம்.Sekar Babu compares H. Raja to a dog ..!

அறநிலையத்துறையில் குறைகள் பதிவேடு துறை ஆரம்பித்தோம், இணையதளம் மூலம் குறைகளை மக்கள் தெரிவிக்க கடினமாக இருந்ததால் தொலைபேசி எண்ணை அறிவித்தோம். அதன் மூலம்,  இதுவரை 4500 குறைகள் வந்துள்ளன. மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம். விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹெச்.ராஜா வின் இந்து சமய அறநிலையத் துறை மீதான ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் இந்து சமய அறநிலைத்துறை கருத்தில் கொள்ளாது. எதையோ பார்த்து ஏதோ குறைக்கிறது என்று நினைத்துக்கொள்வோம். ஹெச் ராஜா  மத்திய அரசின் பிரதிநிதி அல்ல.

சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வழிபாட்டிற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஜயதசமி அன்று கோவில் திறப்பது தொடர்பாக நீதிமன்றதில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.Sekar Babu compares H. Raja to a dog ..!

திருநீர் மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மற்ற கோயில்களில் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது’’எனத் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios