Asianet News TamilAsianet News Tamil

முடிந்தால் ஆட்சியை கலைத்து பாருங்கள் - எடப்பாடிக்கு சவால் விடும் செந்தில்பாலாஜி...

Seethigala and Dtiv Dinakaran are the chief minister and if it ends dissolve the regime and re-assemble the assembly.
Seethigala and Dtiv Dinakaran are the chief minister and if it ends dissolve the regime and re-assemble the assembly.
Author
First Published Aug 10, 2017, 5:08 PM IST


முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது சசிகலாவும், டிடிவி தினகரனும் தான் எனவும், முடிந்தால் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி ஜெயித்து காட்டுங்கள் என  எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது சசிகலாவும், டிடிவி தினகரனும் தான் எனவும், முடிந்தால் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி ஜெயித்து காட்டுங்கள் எனவும் சவால் விடுத்தார். 
மேலும், டிடிவி தினகரனும் சசிகலாவும் இல்லையென்றால் அதிமுகவே இயங்காது எனவும் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios