சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் படம் கண்ணே கலைமானே. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். மதுரை, வாடிப்பட்டியைப் பின்னணியாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் அன்பன் என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளார் சீனு ராமசாமி. கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த நேரத்தில், என்மனதில் உதயநிதி ஸ்டாலினை மக்கள் அன்பன் என்றே அழைக்கத் தோன்றியது என்று தனது டுவிட்டரில் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

அவரது டுவிட்டுக்கு உதயநிதி ஸ்டாலின், உங்கள் அன்புக்கு நன்றி சார். அந்த அளவிற்கு தகுதி எனக்கு இப்பொழுது இருப்பதாக நான் நம்பவில்லை. படம் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி என்று டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.

தற்போது சீனு ராமசாமியின் மக்கள் அன்பன் பட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை சீனு ராமசாமி கொடுத்திருந்தார்.