Seeman wished Kamal to get success in his political travel
நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் அவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். இதனை முன்னிட்டு பல்வேறு மூத்த தலைவர்களையும் கமல்ஹாசன் சந்தித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பிற்குப் பின், செய்தியாளர்களுக்கு இருவரும் ஒன்றாக பேட்டியளித்தனர்.
அரசியலில் மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறார் கமல் என்று கூறிய சீமான், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்ததாக கூறினார். மேலும், கமல் என்னை பார்க்க வருவதாக கூறினார். மாபெரும் கலைஞனான கமல்ஹாசன் தன்னை வந்து பார்ப்பதை விட நானே அவரை பார்க்க வந்தேன் என்றும் அவரது அரசியல் பயணம் வெற்றி பெறும் என்றும் சீமான் கூறினார்.
