நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டம் ஆகியுள்ளது. இருப்பினும், அதற்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதே போல் தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள்குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

“மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் அரசியலமைப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. இதை இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகவோ அல்லது ஈழத்தமிழர்களுக்கு எதிரானதாகவோ நாங்கள் பார்க்கவில்லை. மனிதகுலத்துக்கு எதிரானதாகத்தான் பார்க்கிறோம் என்று சீமான் தெரிவித்தார்.

அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இதை ஆதரித்து மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. அதிமுக மீதமுள்ள ஒன்றரை ஆண்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த வரலாற்றுப் பிழையை செய்திருக்கக் கூடாது” என்று கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சீமானுக்குக் குடியுரிமை இல்லைன்னு சொன்ன நான் கவலைப்படப் போவதில்லை என்று சொல்லி சஸ்பென்ஸ் வைத்த சீமான்,  என்னிடம் பாஸ்போர்ட்டை மட்டும் தந்துவிடுங்கள். எங்களுக்கென்று கைலாசா என்று ஒரு நாடு உருவாகிவிட்டது. எங்கள் அதிபர் நித்யானந்தா இருக்கிறார். அங்கே நாங்கள் சென்று ஜாலியாக இருந்து கொள்கிறோம் என்று அனைவரையும் சிரிக்க வைத்தார்.