இஸ்லாமியர்கள் தமிழர்கள் ஆகவில்லை. தமிழர்கள் நாங்கள் தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கிறோம். அவர்களை தொட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முன் எங்களை எதிர்கொள்ளவேண்டும். எங்களை தாண்டி தான் அவர்களை நெருங்க முடியும். கவனம். 

சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. இப்ப்போராட்டத்தில் இதுவரையிலும் 20 பேர் பலியாகி இருக்கின்றனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் வன்முறையாளர்கள் பொதுச்சொத்துக்களை சூறையாடி இருக்கின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம் குறித்து தனது ட்விட்டர் கணக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மாணவர்கள் மீது குண்டு விழும் என்றார்கள். சீமான் கறி கிடைக்கும் என்றார்கள். இப்போது டெல்லியில் நடந்தது போல தமிழகத்திலும் நடக்கும் என்கிறார்கள். ஜனநாயக வழியிலான அமைதியான அறப் போராட்டத்திற்கு மிரட்டல் விடுகிறார்கள். கை கால்களோடு மட்டுமல்ல வாளோடு முன் தோன்றிய மூத்த குடியின் மக்கள் நாங்கள். நினைத்ததை எல்லாம் செய்து முடித்து கலவரம் செய்து ஆட்டம் போட இது வட நாடு அல்ல.. தமிழ்நாடு. எங்களது பெருந்தன்மையும் பொறுமையும் தான் உங்களது இருப்பை நிலை கொள்ளச் செய்திருக்கிறது.

Scroll to load tweet…

இங்கிருக்கும் இஸ்லாமிய சொந்தங்கள் எங்கோ இருந்து வந்தவர்கள் அல்ல. காலம் காலமாக நீடித்து நிலைத்து வாழும் எம் மண்ணின் பூர்வகுடிகள். எங்கள் உடன்பிறந்தவர்கள். எங்களது ரத்த உறவுகள். இஸ்லாமியர்கள் தமிழர்கள் ஆகவில்லை. தமிழர்கள் நாங்கள் தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கிறோம். அவர்களை தொட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முன் எங்களை எதிர்கொள்ளவேண்டும். எங்களை தாண்டி தான் அவர்களை நெருங்க முடியும். கவனம். 

நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு. இதுல ஊளையிட்டுக்கிட்டே வேற வருதா?

இவ்வாறு சீமான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.