அவரு எப்பவுமே சரியாத்தான் சொல்லுவாரு... சீமான் அதிரடி கருத்து
இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியது உண்மைதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியது உண்மைதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கு இடைத் தேர்தலுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்ட கமல் அரவக்குறிச்சியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறினார், அப்பேது உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் பேரன் அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் எனக் கூறினார்.
மேலும், இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு எனக் கூறினார். கமலின் இந்த சர்ச்சைக்கு கருத்துக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
கமல் ஹாசனின் இந்த பேச்சால் கொந்தளித்து எழுந்த பிஜேபி மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் கமல் பிரச்சாரம் செய்யும் இடங்களில் செருப்பு வீசுதல் மற்றும் முட்டை வீச்சு போன்ற சம்பவத்தை நடத்தினர்.
இந்நிலையில், இன்று ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , கமல் பேசியது வரலாற்று உண்மை. கமலஹசனின் கருத்தை வைத்து சுயலாபதிற்காக அரசியல் செய்கின்றனர் எனக் கூறியுள்ளார்.