பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி என சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-  

பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி என சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

தம்பி பேரறிவாளனது விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவெடுக்கத்தவறினால் அரசியலமைப்புச்சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு, உத்தரவிடுவோமென உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது. நியாயமும், நீதியும் பக்கமிருந்தும் அரசியல் தலையீட்டாலும், அதிகார முறைகேட்டாலும் இவ்வளவு ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு, தடுக்கப்பட்ட தம்பியின் விடுதலை இன்றைக்கு சாத்தியப்படவிருப்பது அளப்பெரும் மனமகிழ்வைத் தருகிறது.

அரசியலமைப்புச்சாசனத்தைத் துளியளவும் மதியாது, கூட்டாட்சித்தத்துவத்தைக் கேலிப்பொருளாக்கி, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்து வந்த ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் கொடுத்த சவுக்கடியாகவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இக்கூற்றைப் பார்க்கிறேன். ஆகவே, இனியும் தாமதிக்காது, 161வது சட்டப்பிரிவின்படி எழுவர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தமிழகச் சட்டமன்றத்தீர்மானத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென தமிழக ஆளுநரை வலியுறுத்துகிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது. 

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று பல ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் பேரறிவாளன், சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று அனுபவித்து வருகின்றனர். தண்டனை காலம் முடிந்த பின்னரும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து வருகிறது. நீதிபதிகள் நாகேஷ்வரராவ், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கு விசாரணை நடைபெற்ற போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவரத்தில் ஆளுநருக்கு தான் அதிகாரம் உள்ளது என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரம் மாநில அரசு சார்ந்த விஷயம், மாநில அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்புகிறது என்றால் ஆளுநர் அதற்கு கட்டுப்பட வேண்டும் என்ற சட்ட விதிமுறைகள் உள்ளன. இதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன. ஆகவே இந்த வாதத்தை ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மீண்டும் மத்திய அரசு வழக்கறிஞர் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் பரிசீலிப்பது அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது அல்லது அமைச்சரவை முடிவை நிராகரிப்பது என மூன்று விஷயங்கள்ஆளுநரின் கையில் உள்ளது எனவே சட்டப்படி அவர் நடவடிக்கை எடுப்பார் என கூறினார். 

அப்போது குறிப்பிட்ட பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ஆளுநர் இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததே தவறு என நாங்கள் கூறும் பொழுது, குடியரசுத் தலைவரின் முடிவு குறித்து வாதங்களை மத்திய அரசு வைப்பது ஏற்புடையது அல்ல என கூறினார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் மத்திய அரசு மேற்கொண்டு எந்த ஒரு வாதங்களை முன் வைப்பதற்கு தேவையில்லை என்று சொல்லும் பட்சத்தில் இந்த இடத்திலேயே நாங்கள் பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிப்போம் என்றும், ஆனால் மத்திய அரசின் கருத்துக்களையும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம் எனவும் அதிரடியாக கூறினார். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் இந்த சட்ட சிக்கல் எல்லாம் பார்க்காமல் தனது விடுதலைக்கான வாய்ப்புகளை மட்டும் பார்க்கிறார்.

21 வருடத்திற்கு மேலாக சிறையில் வாடுபவர்களுக்கு அவர்களது வாழக்கு சரியான நகர்வுகள் இல்லாத பட்சத்தில் அதன் மீது உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும். அந்த அடிப்படையில் இந்த வழக்கில் நாங்கள் ஏன் முடிவெடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். இந்நிலையில்தான் சீமான் இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் ஆளுநரையும் கண்டித்து இவ்வாறு காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.