தமிழர்கள் தாக்கப்பட்டபோது பிரசாந்த் கிஷோர் எங்கிருந்தார்? தமிழகத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும்!சீறும் சீமான்

பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தை பற்றி தெரியுமா.? தமிழர்களை சுட்டுக் கொல்லும் பொழுதும் மீனவர்களை சிறைபிடிக்கும் போதும் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Seeman questioned what Prashant Kishore knows about Tamil Nadu

போராட்டத்திற்கு சீமான் ஆதரவு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தொழிலாளர்களுக்கு 2015-ம் ஆண்டில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு இன்று வரை வழங்கப்படவில்லை, இதனை கண்டித்து ஓழ்வு பெற்ற ஊழியர்கள் சென்னையில்  கோட்டைய நோக்கி முற்றுகை போராட்டத்தை  பல்லவன் இல்லம் முன்பு நடந்தினர். இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக முழுவதும் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஓய்வூதியதார்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து பங்கேற்று மேடையில் பேசிய போது, தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்கு இவர்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லை தொட்டதுக்கெல்லாம் போராட்டம் நடத்துகிறார்கள் என்று  கடந்து செல்வார்கள் என கூறினார். ஆனால் இழந்து விட்ட உரிமைகளை பிச்சை கேட்டு பெறமுடியாது போராடித்தான் பெற வேண்டும் என தெரிவித்தார்.

Seeman questioned what Prashant Kishore knows about Tamil Nadu

தமிழர்களை தாக்கிய யார்.?

இதே போராட்டத்தை டாஸ்மார்க் ஊழியர்கள் செய்தால் உடனடியாக கவனத்தில் எடுத்து தீர்த்து வைத்து இருப்பார்கள். அகவிலைப்படி  கொடுக்க காசு இல்லை.  ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்  ரூபாய் கொடுக்க 350 கோடி ரூபாய்  எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், வட இந்தியர்கள் தான் தமிழக இளைஞர்களை தாக்குகிறார்கள், திருப்பூரில் கட்டையை தூக்கிக்கொண்டு தமிழர்களை  அடித்தது யார்? பிரஷாந்த் கிஷோர் பீகாரன் முதலமைச்சருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நான் என் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன், அதனால் வழக்குபதிவு குறித்து நான் கவலைப்படுவதில்லை அதை பொருட்படுத்தவும் இல்லை என தெரிவித்தார். 

Seeman questioned what Prashant Kishore knows about Tamil Nadu

குற்ற சம்பவம் அதிகரித்துவிட்டது

தொடர்ந்து பேசியவர் வட மாநிலத்தவர்கள் , தமிழகத்திற்குள் வரும் பொழுது அவர்களுக்கான அடையாளங்களை ஒப்படைக்க வேண்டும் என்று தான் நான் கேட்கிறேன். ஏடிஎம் மையங்களில் திருடி சென்றவர்களை ஹரியானாவில் சென்று கண்டுபிடித்தனர். மீதி இருவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை காரணம் இவர்களிடம் தரவுகள் இல்லை. வட இந்தியர்கள் தமிழகம் வந்த பிறகு குற்ற செயல்களின் எண்ணிக்கை கூடி இருக்கிறதா இல்லையா? அதேபோன்று போதைப் பொருள்கள் விற்பனையும் கூடியுள்ளது இது அனைவருக்கும் தெரிந்ததுதான். இவையெல்லாம் நான் போதிக்கும் போது யாருக்கும் புரியாது பாதிக்கும் போது அனைவருக்கும் புரியும் அப்போது நான் சொன்னது சரி என்பீர்கள் அதுவரையில் நான் பொறுமையாக தான் இருப்பேன் என்றார்.

இதையும் படியுங்கள்

இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது.! - டிடிவி தினகரன் ஆவேசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios