சீமான் தன்னை 7 நாட்களாக மதுரையில் ஒரு அறையில் பூட்டி வைத்து செய்த சம்பவங்களை நடிகை விஜய லட்சுமி வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

சீமான் தன்னை காதலித்து ஏமாற்றியதாக தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை விஜயலட்சுமி. சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ’’என் பின்னால் எந்த அரசியல் கட்சியும் எந்த ஒரு பெரிய அரசியல்வாதி எதுவும் இல்லை. இது முழுவதுமான எனது போராட்டம். எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். அதிமுகவில் ஜெயலலிதா இருந்தார். அப்போது பெண்கள் தைரியமாக இருந்தார்கள். திமுக என்று எடுத்துக் கொண்டாலும் அங்கேயும் தலைவர்கள் இருக்கிறார்கள்.

கேப்டன் விஜயகாந்த்,  ராமதாஸ்  கட்சி, காங்கிரஸ், பிஜேபி என கட்சிகளை பார்த்திருப்பீர்கள். இவர்கள் எல்லோருமே பார்த்தீர்களானால் யார் ஒருத்தர்  உயிர் பயம் கொடுக்க மாட்டார்கள். உங்களை கொன்றுவிடுவேன் என்று எதுவுமே மிரட்ட் மாட்டார்கள். சீமானுடன் வழக்கறிஞர் இதற்கு முன்பு பேசும்போது ’எல்லோரையும் அன்பாக பார்த்துக் கொள்ளுங்கள். பாசமாக பார்க்கச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருந்தார்.

சீமானின் அன்பு தம்பிகளே, அவரின் பேச்சை கேட்டீர்களா? அவர் எந்த தரத்தில் பேசுவார் என்று புரிந்திருக்கிறீர்களா? முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ்காந்தி மரணத்தை சரியானது என்று பேசினார். எல்லோரும் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு அம்மா அப்பா யாராவது கொலை செய்யப்பட்டிருந்தால் அதனை பற்றி சரி எனப் பேசுவீர்களா? எந்த போராட்டத்திற்கு தீர்வு சாவுதான் என்றால் என்னாகும்.?

 2007-இல் நான் சீமான் மீது புகார் கொடுத்த போதும் ’தயவுசெய்து போலீஸ் பாதுகாப்பு கேட்டு உன் உயிரை காப்பாற்றிக் கொள்’என அறிவுறுத்தினார்கள். மதுரையில் எத்தனை நாட்கள் ஒரு அறையில் என்னை பூட்டி வைத்திருந்தார்கள் தெரியுமா? அப்படி எல்லாம் நான் சித்திரவதை அனுபவித்திருக்கிறேன். கடவுள் இன்னும் என்னை உயிரோடு வைத்திருக்கிறார் என்றால், நான் பட்டதை வெளியுலகுக்கு காட்டத்தான். வேறு எந்த பெண்களும் நான் பட்ட கஷ்டத்தை படக்கூடாது என்று தான் உயிரோடு இருக்கிறேன்.

 காளியம்மாள் பேசுகிறார். அவருக்கு யார் சொல்லியிருப்பார்?  அச்சுறுத்தலை கொடு என்று சீமான் தான் சொல்லி பேச வைத்திருப்பார். அவர்களுக்கு தெரியாது சீமான் என்னை ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தது. அவருடன் இருக்கும் வழக்கறிஞருக்கு தெரியாது.  சீமான்  ஒரு அபாயகரமான ஆள். சீமான் போன்ற ஆட்களுக்கு பவர் கொடுத்தால் இன்றைக்கு நான். நாளைக்கு வேறு யாரோ? உயிர் போய்விடும் என்பது உறுதி. எனக்கு பிரச்னை வந்தபோது ரஜினி கட்சி ஆதரவாளர்கள் எனக்கு தெரியும் கொடுத்தார்கள். கவலைப்படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று ஊக்கப்படுத்தினார்கள். சீமானை வளரவிடாமல் நசுக்கி போடுங்கள். பெண்கள் தயவு செய்து பத்திரமாக இருங்கள். காளியம்மாள் ஒரு நல்ல பெண் என்றால் என்னுடைய நிலைமை அவருக்குப் புரிந்து இருக்கும்’’என அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்:-மாட மாளிகையில் வாழ வைக்கப் போறாங்க... உனக்குத்தானடி சிக்கல்... சீறும் சீமான்..!