தற்போது, மாமியார் வீட்டுச் சீதனமாக சீமான் வாங்கிய இன்னொரு சொத்து விவரத்தையும் அந்தத் தம்பிகள் வெளியிட்டிருக்கிறார்கள். 

வீட்டுச் சீதனமாக சீமான் வாங்கிய இன்னொரு சொத்து விவரத்தையும் முன்னாள் தம்பிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

’’என்னிடம் எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி உங்களுக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது? எப்படி சாப்பிடுகிறாய் என்கிறார்கள். ஒவ்வொருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு தான் செலவு செய்கிறேன், எனக்கு வெளிநாட்டிலிருந்து கோடிகோடியாக பணம் வருகிறது என்றும் கூறுகிறார்கள், நான் கேட்கிறேன் வெல்லமண்டி வைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி எப்படி இவ்வளவு பெரிய பணக்காரரானார் என கேட்கிறீர்களா? 

தம்பி உதயநிதி தொடர்ச்சியாக படமெடுக்கிறார் ஒரு படம் கூட ஓடவில்லை, ஆனால் தொடர்ந்து உதயநிதி படமெடுக்கிறார் பணம் எப்படி வருகிறது என்று அவரிடம் கேட்டு இருக்க வேண்டுமே இவ்வளவு பெரிய வீடுகளைக் கட்டி வாழ்கிறீர்கள் ஆனால் எனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை, இந்த நாட்டையே அடைய துடிக்கும் எனக்கு வாழ்வதற்கு வீடு இல்லை என்பது எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. உண்மையிலேயே சீமானுக்கு வீடு இல்லையா? என பலரும் ஆச்சர்யத்துடன் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்று, அவரது மனைவி மீது உள்ள சொத்து விவரத்தை சில ஆதாரங்களுடன் வெளியிட்டது. அதில், சீமானின் மனைவி கயல்விழியின் பெயரில் கொடைக்கானல் வில்பட்டி என்ற பகுதியில் 6 ஏக்கர் நிலம் உள்ளது என்றும், கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் அளவுக்கு தன் மனைவியில் பெயரில் சொத்தை கையில் வைத்துள்ள சீமான், உண்மைக்கு புறம்பாக தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என பேசி வருகிறார்.

 இந்த ஒரு இடத்தில் இருக்கிற சொத்தின் ஆதாரம் மட்டுமே இது என்றும், இன்னும் எந்தெந்த இடத்தில் இதுபோல சொத்து இருக்கிறது என்பது தெரியாது எனவும் அந்த யூடியூப் சேனல் செய்திவிட்டது. அதனையடுத்து பலரும் சீமானை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

 தற்போது, மாமியார் வீட்டுச் சீதனமாக சீமான் வாங்கிய இன்னொரு சொத்து விவரத்தையும் அந்தத் தம்பிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

மதுரை காளவாசல் - பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் உள்ள ‘கே.எம்.ஏ. காம்ப்ளக்ஸ்’ வணிக வளாகம்தான் அந்த சொத்தாம். இதன் படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு, ‘‘இதன் மதிப்பு 15 கோடி. இதிலுள்ள 25 கடைகள் மூலம் மாதந்தோறும் குறைந்தது 1 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. இத்தனை வருமானத்தையும் வைத்துக்கொண்டுதான் உங்க அண்ணன் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார் உஷார் தம்பிகளே...” என்று சொல்லி இருக்கும் அந்தத் தம்பிகள், “அண்ணன் விருப்பப்பட்டால், இது சம்பந்தமான பத்திரத்தையும் வெளியிடத் தயாராய் இருக்கிறோம்” என்கிறார்கள்.