கொரோனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்த உள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளில் குறைந்தது 47 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. சீனாவுக்கு வெளியே எந்த இறப்பும்  இதுவரை பதிவாகவில்லை. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்

.

இப்படி உலகமே பரபரத்துக்கிடக்க  நமது மீம்ஸ் கிரியேட்டர்கள் பலமாக யோசித்து சீமானை வைத்து பட்டையை கிளப்பி இருக்கிறார்கள், அதில் சீமான் சீனாவை நோக்கி போதிதர்மர் வேடத்தில் குதிரையில் செல்வதாக சித்தரித்துள்ளனர். 

 

இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அதேபோல் சீமான் நித்யானந்தாவை விமர்சித்த போது காவி உடையில் தாடி வைத்ததைப் போல மீம்ஸ் போட்டு சாமியாராக்கி வைரலாக்கினர்.