31 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை..! 15 மணி நேரம் நாற்காலியில் அமரவைத்து கொடுமை- சீமான் ஆவேசம்

31 ஆண்ண்டுகள் நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைக்காமல் மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
 

Seeman has insisted that those released after 31 years of imprisonment should not be kept in the Trichy camp

6 பேர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7  பேர் கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் தங்களையும் விடுதலை செய்யும் படி நளினி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 6 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று சிறையில் இருந்து 6 பேர் வெளியாட நிலையில், இலங்கை தமிழர்களான  இராபர்ட் பயஸ்,  ஜெயக்குமார்,  சாந்தன்,  முருகன் ஆகியோரை திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு உரிய அறைகள் ஒதுக்காமல் சுமார் 15 மணி நேரம் நாற்காலியில் அமர வைத்ததாக தகவல் வெளியானது.

தமிழில் பொறியியல் கல்வி 12 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம்..! அமித்ஷாவிற்கு பதில் அளித்த பொன்முடி

Seeman has insisted that those released after 31 years of imprisonment should not be kept in the Trichy camp

திருச்சி முகாமில் அடைப்பு

இந்தநிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச்சென்று 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாது, ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்திருந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  

வெளிநாட்டு,உள்நாட்டு சதி உள்ளது..! மத்திய அரசிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது- ரவிச்சந்திரன் வேதனை

 

மாற்றிடத்தில் தங்க வைக்க வேண்டும்

நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைக்காது மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

மழையால் வட சென்னை பாதிப்பு..! களத்தில் இறங்கிய முதலமைச்சர்..! நாளை சீர்காழியில் ஆய்வு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios