வெளிநாட்டு,உள்நாட்டு சதி உள்ளது..! மத்திய அரசிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது- ரவிச்சந்திரன் வேதனை
மத்திய அரசிடம் தமிழர்களுக்கான எந்தவித கருணையையும் எதிர்பார்க்க முடியாது, இந்த நிகழ்வுக்கு பின்னால் வெளிநாட்டு உள்நாட்டு சக்திகள் உள்ளது. அவர்கள் மீது கைவைக்க முடியாது என்பதால் எங்களுக்கு ஈசியாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக சிறையில் இருந்து விடுதலையான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் கொலை- 6 பேர் விடுதலை
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை சிறையில் இருந்து விடுதலையான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன், உச்சநீதிமன்றம் 6பேரை விடுதலை செய்தது ஆறுதல் தருகிறது. இந்த மகிழ்ச்சி உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி, தமிழ்கூறும் நல் உலகம் அனைவருக்கும் நன்றி, துயரம் எனக்கானது மகிழ்ச்சி அனைவருக்குமானது, எங்களது விடுதலைக்கு உதவிய தமிழக முதல்வர் ஸ்டாலின், எங்கள் விடுதலைக்கான திறவுகோலை தந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும் நன்றி, அவர் மறைந்தாலும் அவரை நினைவுகூறுகிறேன் என்றார். தனது வடிதுலைக்காக போராடியவர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க இருப்பதாக கூறினார்.
மத்திய அரசே காரணம்
எங்களுக்கு கிடைத்தது தாமதமான நீதி என்பது அனைவருக்குமே தெரியும் என கூறியவர், எனது தாயார் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த விடுதலை இத்தனை ஆண்டின் வலிக்கான நிவாரணி என கூறினார். தமிழகத்திற்கு முன் உதாரணமாக அரசியலுக்கு மதுரை என்பது போல எங்களது விடுதலைக்கான தொடக்க இடமும் மதுரை தான் என குறிப்பிட்டார். விடுதலை செய்யப்பட்டவர்களை சிறப்பு அகதிகள் முகாமில் வைக்ககூடாது, சிறப்பு அகதிகள் முகாம் என்பதே வீட்டுச்சிறை போல தான், விடுதலை செய்யப்பட்டவர்களை சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்கள் குடும்பத்துடன் இணைய வேண்டும் என்பது எனது ஆசை எனவும் தெரிவித்தார். சட்டத்திற்கு அப்பாற்பட்டு எங்கள் விடுதலையை மத்திய அரசு தடுத்ததாக வேதனை தெரிவித்தார். கடந்த 2004 ஆம் ஆண்டே விடுதலை கிடைத்திருக்கும் ஆனில் எங்கள் விடுதலையை 15 ஆண்டுகள் தாமதப்படுத்தியது மத்திய அரசு என குற்றம்சாட்டினார்.
வெளிநாட்டு சதி
ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னர் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் உள்ளதால் அவர்களை கைவைக்க முடியாது என்பதால் எங்களுக்கு ஈசியாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
உச்சநீதிமன்ற உத்தரவு - நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேர் விடுதலை !