Asianet News TamilAsianet News Tamil

சீமான் தொடர்ந்த வழக்கு.. விஜயலட்சுமிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போட்ட அதிரடி உத்தரவு!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக பிரண்ட்ஸ் திரைப்பட நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Seeman case... Chennai High Court orders Actress Vijayalakshmi to appear on March 19 tvk
Author
First Published Mar 6, 2024, 2:24 PM IST

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக பிரண்ட்ஸ் திரைப்பட நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Seeman case... Chennai High Court orders Actress Vijayalakshmi to appear on March 19 tvk

அதில், கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகாரை 2012-ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் கொடுத்தார். அதன் அடிப்படையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு காவல்துறை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

Seeman case... Chennai High Court orders Actress Vijayalakshmi to appear on March 19 tvk

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்கு 2023ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி நேரில் விஜயலட்சுமிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், விஜயலட்சுமி ஆஜராகவில்லை. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.  இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரரான நடிகை விஜயலட்சுமி, மார்ச் 19-ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios