seeman angry speech about rajini

ரஜினியின் அரசியல் பிரவேசப் பேச்சுக்கு எழுந்த வரவேற்பை விட, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களே தற்போது கொளுந்துவிட்டு எரிகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன், உள்ளிட்ட தலைவர்கள் ரஜினியை சாப்ஃட் கார்னரில் பார்த்தாலும், நாம் தமிழர் சீமானின் பேச்சில் அத்தனை காரம். ஆரம்பம் முதல் இறுதிவரை கொஞ்ம் கூட கேப்விடாமல் அடித்து நொறுக்கியிருக்கிறார். 

ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சை ஆரம்பம் முதலே விமர்சித்து வரும், சீமான் இந்த முறை காரம் கூட்டிய குழம்பு போல கொத்தெழுந்திருக்கிறார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ரஜினி அரசியலுக்கு வரத்தேவையில்லை.ரஜினி என்ன செய்வேன் என்று கூறுகிறாரோ அதனை நாங்கள் செய்வோம். ரஜினி நடித்து சம்பாதித்து விட்டுச் செல்லட்டும். நாட்டை ஆள எனக்கே உரிமை உள்ளது." இவ்வாறு சீமான் கூறினார்.