தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முதலில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். பின்னர் மாநில நிர்வாகிகள் நியமனம், வழக்கறிஞர் அணி, மீனவர் அணி, மகளிர் அணி என பல்வேறு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் ரஜினி ரசிகர் மன்றத்திற்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
   
இந்த நிலையில் துபாய், சவூதி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியுசிலாந்து உள்ளிட்ட நாட்டிற்கான நிர்வாகிகள் என்று தற்போது ரஜினி ரசிகர் மன்றம் நிர்வாகிகளை அறிவித்து வருகிறது. தற்போது ஆட்சியில் உள்ள அ.தி.மு.க., முன்பு ஆட்சியில் இருந்த தி.மு.க ஆகிய கட்சிகளுக்கும் வெளிநாடுகளில் நிர்வாகிகள் உண்டு ஆ னால் ரஜினி ரசிகர் மன்றத்தை போல் எல்லா நாடுகளுக்கும் நிர்வாகிகள் கிடையாது.


   
ரஜினியின் இந்த நடவடிக்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சீமான், ரஜினிக்கு அது ஒரு பொழுது போக்கு என்று பதில் அளித்தார். திடீர்னு வருவார் மோசஸ், நபிகள் நாயகம் போல பத்து கட்டளைகளை ரஜினி அறிவிப்பார். ஊடகங்களுக்கும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதித்துக் கொண்டிருப்பார்கள். தமிழக மக்களை ரஜினி எந்த அளவிற்கு மடையர்கள் என்று கருதுகிறார் என்பதை இதன் மூலம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திடீர்னு நினைச்சா காலையில ஒரு அறிக்கை ரஜினி வெளியிடுவார். கட்சி ஆரம்பிக்க போறேன், போறேன்னு சொல்லிகிட்டே இருப்பார். நாங்களும் அத தான் சொல்ரோம் ரஜினி முதல்ல கட்சி ஆரம்பிக்கட்டும். இவ்வாறு சீமான் பேசினார்.