ஏஸியாநெட் தமிழ் ஏற்கனவே கோடிட்டுக் காட்டியது போல, 2019 தேர்தல் பரப்புரை சீசனின் ஹாட் ஹீரோ சீமான் தான். காரணம்? மற்ற தலைவர்கள் எல்லாம் ‘இலவசங்களை தர்றோம் ஓட்டுப் போடுங்க.’ என்று பேசியபோது, சீமான் மட்டும்தான் ‘இயற்கையை பாதுகாப்போம். வாக்களியுங்க’ என்று ஆரோக்கியமான திசையில் பரப்புரையை கொண்டு சென்றார். 

ஜெயிக்கிறாரோ இல்லையோ! ஆனால்....’நீ வாக்களிப்பேன்னு நினைச்சு நான் இதை பேசலை. ஆனா இந்த மூடிக்கிடக்கும் உண்மைகளை நான் உனக்கு சொல்லலேன்னா, வேற யாருடா சொல்லுவா தமிழா?’ என்று அவர் கேட்டபோது, பலருக்கு கண்கள் கலங்கியது, இரு கரங்களையும் மேலே உயர்த்தி, தன்னெழுச்சியாய் கைதட்டினார்கள். 

இப்படி நேர்மறை விஷயங்களை பரப்புரை செய்தாலும் கூட ஆங்காங்கே ஆதிக்க அரசியலுக்கு வேட்டு வைக்க தவறவில்லை சீமான். வாய்புக் கிடைக்கும் இடங்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டையும் வாரித் தோண்டித்தான் விமர்சித்து தள்ளினார். 

ஒரு இடத்தில்...”நம்ம மாநிலந்தான் தம்பி இப்படி நாசமாகிட்டே போவுது. பக்கத்துல இருக்குற கேரளத்தைப் பாருங்க. கல்வியில சிறப்பா இருக்குது. அங்கே எந்த முதல்வர்கள் ஆட்சிக்கு வந்தாலும் எளிமையாகதான் இருக்கிறாங்க. அவங்க அரசியலே அவங்க மாநிலத்தை ஆரோக்கியமா வைக்கிறா தொனியிலேயே இருக்குது. குறிப்பா ஓட்டுக்கு காசு கொடுக்குறதில்லை. 

இயற்கையை வணங்குறாம்யா. காடுகளை வெட்டி அழித்து எட்டு வழிச்சாலை, பத்துவழிச்சாலைன்னு போடுறதில்லை. நீர் மேலாண்மையில சிறப்பா இருக்காய்ங்க. 

ஆனால் நம்ம மாநிலத்துல என்ன நடக்குது? ஆற்றல் மிக்க இளைஞர் சக்தியை வெச்சிருக்கிறோம். ஆனா எதையாவது பயன்படுத்த முடியுதா? இயற்கை வளங்களை முழுமையாக இழந்துட்டு இருக்கிறோம். பெருமளவு இழந்தாச்சு. 

எங்களோட கனவு பெரியதுய்யா. ஆனா இந்த ரெண்டு திராவிடக்கட்சிகளும் அதை நிறைவேத்த மாட்டாய்ங்க. நம்மளை உருப்பட விடவும் மாட்டாய்ங்க.” என்றிருக்கிறார். 

சீமானின் பரப்புரை அரசியல் எல்லைகள் தாண்டி விரிவாய் வரவேற்பை பெற்றிருப்பதில் இரண்டு அணிகளுக்குமே கடும் கோபம். அதனால் ‘முதல்ல தி.மு.க.வுக்கு வால் பிடிச்சார், அப்புறம் ஜெயலலிதாவை போற்றினார்...இப்படி சீசனுக்கு ஒரு சித்தாந்தம் வெச்சிருக்கிற சீமானையெல்லாம் நம்பாதீங்க. எங்கே கூலி அதிகம் கிடைக்குதோ அங்கே கூவும் வெகு சாதாரண தொழிலாளி அவர்.” என்றிருக்கிறார்கள். 
என்னண்ணே இப்படி சொல்லிப்புட்டாய்ங்க?