கடந்த சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டார். ஆனால் அங்கு அவர் படு தோல்வி அடைந்தார். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் கடலூர் நாம் தமிழர் கட்சிக்கு அதிக தொண்டர்கள் உள்ளனர். இதனை நம்பி தான் சீமான் அங்கு களம் இறங்கினார். ஆனால் கடலூர் மக்கள் சீமானை புறக்கணித்துவிட்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட சீமான் முடிவு செய்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தியது போல் நாடாளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்கிற முடிவில் சீமான் உறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் வேட்பாளர் தேர்விலும் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக சொல்கிறார்கள்.கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டிய நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அந்த கட்சியினர் மத்தியில் பெரிய ஆர்வம் இல்லை என்கிறார்கள். எனவே நிர்வாகிகளை உற்சாகப்படுத்த தானும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஒரு தகவலை சீமான் வெளியிட்டு வருகிறாரர். சட்டமன்ற தேர்தலை விட அதிக வாக்குகளை நாடாளுமன்ற தேர்தலில் பெறுவது தான் இலக்கு என்று அவர் கூறி வருகிறார்.
 
இதன் ஒரு பகுதியாகவே தனது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் போட்டியிட சீமான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தனது சொந்த ஊர் என்பதோது ஜாதி பலமும் அங்கு கை கொடுக்கும் என்று சீமானுக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். இதனால் சீமான் கடந்த முறை போல் தொடர்பு இல்லாத ஒரு தொகுதியில் நின்று படு தோல்வி அடைவதை விட தெரிந்ததொகுதியில் நின்று கணிசமான வாக்குகளை பெற வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துள்ளார்.


 
தான் சார்ந்த சமுதாயத்தினரும் தனது மனைவி சார்ந்த சமுதாயத்தினரும் கணிசமாக ராமநாதபுரம் தொகுதியில் உள்ளதால் சீமான் நம்பி களம் இறங்கலாம் என்று ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. அதே போல் சீமான் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என்று ஒரு தரப்பு வலியுறுத்தி வருகிறது. கனிமொழி அங்கு போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்த்து சீமான் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.
 
ஆனால் இந்த விவகாரத்தில் சீமான் அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டார் என்றே தெரிகிறது.