Asianet News TamilAsianet News Tamil

இழுபறியில் சீட் ஷேரிங்…. அதிருப்தியில் இடது சாரிகள்… கெத்து காட்டும் திமுக !!

நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுக்கு 3 தொகுதிகள் வேண்டும் என அடம் பிடித்து வரும் நிலையில், சிபிஎம்க்கு 2 ம், சிபிஐக்கு 1 என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதையும் திமுகவே முடிவு செய்யும் என தெரிகிறது.

seat sharing between cpm, cpi and dmk
Author
Chennai, First Published Feb 2, 2019, 8:51 AM IST

வரும் மே மாதம் நடைபெறவுள்ள  நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என சில அரசியல் கட்சிகள்  இந்த கூட்டணியில் இணைய உள்ளது.

கூட்டணி கட்சிகளுடன் பேசுவதற்கு கட்சியின் பொருளாளரான துரைமுருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி, திமுக கூட்டணியில் முறைப்படி கூடடணியில் இணைய உள்ளது.

seat sharing between cpm, cpi and dmk

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், இதற்காக உயர்மட்ட குழு கூட்டத்தை நடத்தியுள்ளது. சிபிஎம் சார்பில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், உ.வாசுகி உள்பட ஒரு குழுவினர் அமைக்கப்படுகிறார்கள். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன், சி.மகேந்திரன், திருப்பூர் சுப்பராயன் உள்பட ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. 
தற்போதைய நிலையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 3 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவை கேட்க உள்ளனர். அதில் நாகை, திருப்பூர், தென்காசி, வடசென்னை, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளை பட்டியலிட்டுள்ளது சிபிஐ. 

seat sharing between cpm, cpi and dmk
கோவை, மதுரை, கன்னியாகுமரி, சிதம்பரம்,  திண்டுக்கல் ஆகிய தொகுதிகளை சிபிஎம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் பட்டியல் கொடுக்க உள்ளது. கோவை, திருப்பூர், நாகை ஆகிய 3 தொகுதிகளும் இருகட்சிகளின் பட்டியலிலும் உள்ளது. 

seat sharing between cpm, cpi and dmk

ஆனால் சிபிஎம் கட்சிக்கு 2 இடங்களும், சிபிஐ க்கு 1 இடமும் தர திமுக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இநத இரு கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போடியிடுவது என்பதை திமுகவே தீர்மானிக்க உள்ளதாக வெளியான தகவலால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios