sc st education fund by central government
நிர்வாக ஒதுக்கீட்டு மற்றும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேரும் எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் கல்வி உதவித் தொகை வழங்குவதில் கொண்டுவந்த மாற்றத்தை திரும்ப பெற வேண்டுமென கோரி கடிதம் எழுதியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
கல்வி உதவி தொகையில் மத்திய அரசின் பங்கீடாக 1,803 கோடி வழங்க வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
எஸ்.சி/எஸ்.டி மாணவர்களின் கல்விக்கு மத்திய மாநில அரசு 60:40 என்கிற விகிதாச்சாரத்திலே தொடர்ந்து அரசின் பங்கீடு வழங்கவேண்டும் எனக் கோரியுள்ளது தமிழக அரசு
தமிழகத்தில் சிறுபான்மையினர் அதிக அளவில் உள்ளனர் என்றும் உயர்கல்வி வகுப்புகள் தொடங்கும் நிலையில் இருப்பதால் பிரதமர் உடனடியாக தன் முடிவினை தெரிவிக்க கோரி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
