ஏப்ரல் 12ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு தேர்வுகளையும் முடிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக்கல்விதுறை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. ஆகையால் தேர்வு மையம் அமைத்தல், பாதுகாப்பு, மின்னணு ஓட்டு இயந்திர சோதனை போன்ற காரணங்களால், ஏப்., 13ம் தேதியே, கல்லுாரி, பள்ளிகள், தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் சென்று விடும்.

இந்த காலகட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளில் தேர்வுகளை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 12ம் தேதிக்குள் பள்ளிகளில் தேர்வுகளை முடிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்விதுறை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார். வேலைநாட்களில் இழப்பை சனிக்கிழமைகளில் ஈடுகட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து -12ம் தேதிக்குள் தேர்வு அட்டவணையை தயார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தார்வுகால அட்டவணையை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் உடனே அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகையால் விரைவில் மூன்றாம்கட்ட தேர்வுகள் நடந்து முடிய உள்ளதால் மாணவர்களுக்கு மாணவர்களுக்கு விடுமுறை அதிகரிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.