Asianet News TamilAsianet News Tamil

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் சூப்பர் அறிவிப்பு... விண்ணப்பித்த அனைவரும் பாஸ்..!

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வு மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

School Education Minister Anbil Mahesh's super announcement ... All applicants pass ..!
Author
Tamil Nadu, First Published Jul 31, 2021, 1:44 PM IST

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வு மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு மே மாதம் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும், துணைத் தேர்வு எழுத சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும், 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் மூலம் ஜூலை 28ஆம் தேதி ஆன்லைனில் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதற்கு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.School Education Minister Anbil Mahesh's super announcement ... All applicants pass ..!

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. துணைத்தேர்வுகள் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளில் கணக்கிடப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று (ஜூலை-22) காலை 11 மணி முதல் மதிப்பெண்கள் பட்டியலை இணையதளங்களில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக்கூறி அதற்கான இணையதள பக்கத்தை ( http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ) பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.

School Education Minister Anbil Mahesh's super announcement ... All applicants pass ..!

இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்று கருதும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தேர்வெழுதலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதனையும் மீறி தேர்வெழுத விருப்பமுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios