பள்ளி கல்வித்துறை பற்றி கூறை கூறுபவர்கள் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என திமுக எம்.பி. கனிமொழிக்கு அமைச்சர் செங்கோட்டையன் பகிரங்க சவால் விடுத்துள்ளார். 

கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நிவர் புயல் வந்த போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், 5ம் மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தது ஏன் தெரியுமா? மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கருந்து கேட்டு அனைவரும் பொதுத்தேர்வு நடத்த விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனால் மட்டுமே பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்துகாகவும் மிரட்டலுகாகவும் ரத்து செய்யப்படவில்லை. நம்பியூர் பேருந்து நிலையம் கட்டுவதில் முறைகேடு என கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். 

அவர் எப்படி பேசுவதென்பது என தெரியாமல் பேசுகிறார். ஒன்று கொள்கை ரீதியாக பேசவேண்டும். அல்லது செய்கின்ற பணிகளை தெரிந்து பேச வேண்டும். எதுவும் தெரியாமல் பேசி உள்ளார். பள்ளி கல்வித்துறை தொடர்பாக நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என திமுக எம்.பி.கனிமொழிக்கு அமைச்சர் செங்கோட்டைன் சவால் விடுத்துள்ளார்.