Asianet News TamilAsianet News Tamil

பள்ளி கல்லூரிகளை 3 மாதத்திற்கு திறக்க கூடாது... பிரேமலதா விஜயகாந்த் அதிரடி..!

வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

School colleges should not be open for 3 months... Premalatha Vijayakanth
Author
Pondicherry, First Published Nov 9, 2020, 6:36 PM IST

வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் கொரோனா தொற்று இருப்பதால் பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும். தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். 

School colleges should not be open for 3 months... Premalatha Vijayakanth

முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன்கள் சண்முக பாண்டியன் பேட்டியளிக்கையில்;- தற்போது தேர்தல் களத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லை. களத்தில் உள்ள முதலமைச்சர் வேட்பாளர்களும் முதல் முறையாக நிற்கின்றனர். அவர்களுக்கு அனுபவம் இருந்தாலும், இந்த தேர்தல் முதல் தேர்தல் போன்றதது தான்.

School colleges should not be open for 3 months... Premalatha Vijayakanth

நாங்கள் ஏற்கனவே தேர்தலை சந்தித்து உள்ளதால் தேமுதிக. எதிர்நீச்சல் போட்டு செல்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்புள்ளது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை. சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து விஜயகாந்த் முடிவு எடுப்பார். எது எப்படி இருந்தாலும் இந்த முறை பல இடங்களில் நாங்கள் வெற்றியை பெறுவோம் என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios