விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது கான்சாபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தவர் சரஸ்வதி. இவர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காகத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நினைத்து, தான் பார்த்து வந்த அரசுப் பணியை ராஜினாமா செய்தார். கடந்த முறை அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால், தனது அரசு வேலையைப் பறிகொடுத்து ஏமாற்றமடைந்த சரஸ்வதி இதே ஊராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில், மீண்டும் இத்தேர்தலில் தலைவர் பதவிக்காகப் போட்டியிட்ட அவர் 1,113 வாக்குகள் பெற்று 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 50 வயதாகும் இந்தப் பெண் முதல் வகுப்பு கூட படிக்காதவர்.

துப்புரவி பணி செய்வதால்  ரொம்பத் தாழ்வா நினைக்குறாங்களோ, நாமளும் முன்னேற வழியில்லையான்னு யோசித்த சரஸ்வதி நாம ஏன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிடக் கூடாது என்று நினைத்துள்ளார்

தனது கணவரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு மூன்று  ஆண்டுகளுக்கு முன்னால உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிச்சபோதே தனது  வேலையை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கிறது வரைக்கும் அவர் கான்சாபுரம்  ஊராட்சியில் மீண்டும் தற்காலிக துப்புரவுப் பணியாளரா  வேலைக்கு சேர்ந்துள்ளார்.

தற்போது அவர்  213 ஓட்டுகள் வித்தியாசத்துல  வெற்றி பெற்றுள்ளார். படிக்கவில்லை என்றாலும் படித்தவர்களின் உதவியுடன்  எங்கள் கிராமத்துக்கு என் வேண்டுமோ அதை செய்து தருவேன் என சரஸ்வதி உறுதியாக தெரிவித்தார்.