அதிமுகவினர் மீது வேண்டுமென்றே வழக்கு போடப்படுகிறது. 3 முறை மனு அளித்தும் கோவையிலிருந்து குண்டர்கள் வெளியேற்றப்படவில்லை. பயமாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் என அனைவரையும் கோவை மாவட்டத்திலிருந்து மாற்ற வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பாதுகாப்புக்கு துணை இராணுவத்தை அழைத்து வர வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 8 அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளுங்கட்சியின் அராஜகத்திற்கு காவல்துறை துணைபோவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக கோவையில் திமுகவை எதிர்த்து வாக்கு சேகரிப்பவர்கள் மீது பொய் வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் கைது செய்கின்றனர். தவறு செய்பவர்கள் மீது புகார் அளிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்கின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையே ரவுடிகளுடன் கைகோர்த்து விட்டனர் என்ற குற்றச்சாட்டை எஸ்.பி.வேலுமணி முன்வைத்து வருகிறார்.

திமுக அரஜகமாக செயல்பட்டு வருவதாகவும், துணை ராணுவ பாதுகாப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறி கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். வெளியூரில் இருந்து கோவை வந்து தங்கியுள்ள குண்டர்களை திரும்ப அனுப்பாமல் கலைந்து செல்லமாட்டோம் என்று எஸ்.பி.வேலுமணி கூறி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆளுங்கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி;- அதிமுகவினர் மீது வேண்டுமென்றே வழக்கு போடப்படுகிறது. 3 முறை மனு அளித்தும் கோவையிலிருந்து குண்டர்கள் வெளியேற்றப்படவில்லை. பயமாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் என அனைவரையும் கோவை மாவட்டத்திலிருந்து மாற்ற வேண்டும். கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த துணை ராணுவப் படை பாதுகாப்பு வேண்டும். கோவையில் உள்ள வெளிமாவட்டத்தை சேர்ந்த திமுக குண்டர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
