ramanathapuram Corporation Election Result 2022 : ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள 15 வார்டுகளிலும் முக்கிய காட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் திமுக முன்னிலை பெற்று வரும் நிலையில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுகவே முன்னிலையில் உள்ளது. அதில் ஒரு இடத்தில் கூட அதிமுக முன்னிலையில் இல்லை, அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றும் என ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வந்த நிலையில் அது தற்போது நிரூபணமாகியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தம் 12601 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன, பின்னர் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் அகற்றப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . வழக்கம்போல சென்னை திமுகவுக்கு தான் என்பது ஓரளவுக்கு உறுதியாகி விட்டது, அதேபோல் அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் திமுகவே ஆதிக்கம் செலுத்தி வருவதை காணமுடிகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள 15 வார்டுகளிலும் முக்கிய காட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது..சுயேட்சைகளை வெற்றி பெற்று அசத்தியுள்ளார்...