நடை பயிற்சியை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடிய எம்எல்ஏ..சென்னையில் பொதுமக்கள் சரமாரி கேள்வி..
தமிழகத்தில் சசிகலா முதலமைச்சராக முடிவெடுத்து அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓபிஎஸ் போர்கொடி உயர்த்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சசிகலா தரப்பினர் அதிமுக எம்எல்ஏக்களை கூவத்துரில் உள்ள சொகுசு விடுதிக்கு கடத்திச் சென்று தங்க வைத்தனர். அங்கு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது மட்டுமல்லாமல். பணமும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்க தண்டனை கிடைத்ததையடுத்து அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலரமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சசிகலா ஆதரவாளரான எடப்பாடிக்கு எம்எல்ஏக்கள் யாரும் ஆதரவு தரக் கூடாது என்று அந்தந்த தொகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் தொகுதிக்குள் நுழையக் கூடாது என்றும் பொது மக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் 122 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு அளித்தால் அவர்கள் மீது பொது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும எம்எல்ஏ,க்கள் போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலா ஆதரவாளரான சென்னை தியாகராயநகர் தொகுதி, எம்எல்ஏ சத்யா என்கிற சத்தியநாராணன் இன்று காலை வழக்கம் போல் காலை நடைபயிற்சி மேற்கொண்டார். எப்போதும் சிரித்துப் பேசும் பொது மக்கள் இன்று சத்யாவை முறைத்தபடி சென்றனர்.
பின்னர் சிறிது நேரத்தில் அவரை சுற்றி வளைத்த பொது மக்கள், ஏன் சசிகலா ஆதரவாளருக்கு வாக்களித்தீர்கள் ? என கேள்வியால் துளைத்தெடுத்தார்கள். ஏராளமான, பொதுமக்கள், பெண்கள் என அவரை சூழ்ந்து கொண்டு திட்டித் தீர்த்தனர்.
இதையடுத்து சத்யா, நடைபயிற்சியை பாதியிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓனார்.
கூவத்தூர் கோல்டன் பே ரிசாட்டில் தங்கியிருந்தபோது நடைபயிற்சி உடையில் வெளியே வந்து, எங்களை யாரும் கடத்தவில்லை. விடுதியில் தங்கியிருக்கிறோம். நல்லாத்தான் இருக்கிறாம். தினமும் மட்டன் போட்டு எங்களை மட்டையாக்குகிறார்கள் என்று திமிராக பதிலளித்தார்.
