Sasikanth : அண்ணாமலை மனைவியும் என் மனைவியும் தொழில் நண்பர்களா.? காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் விளக்கம்

ஒருவருடைய குடும்பத்தினரை பற்றி பொய்யான அவதூறுகளை பரப்பி அதில் விளம்பரம் தேடுவது சிலருக்கு வழக்கமாகிவிட்டது என தெரிவித்துள்ள சசிகாந்த் செந்தில், எனது மனைவிக்கு முற்றிலும் அறிமுகமே  இல்லாத  நபர்களை இணைத்து கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவது நகைச்சுவையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Sasikanth Senthil denied the video that was released in connection with Annamalai KAK

அண்ணாமலை- சசிகாந்த் செந்தில்

கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரே நேரத்தில் அண்ணாமலை ஐபிஎஸ்ம், சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்ம் பதவி விலகி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு இடையே தொடர்பு உள்ளதாகவும் மதன் ரவிச்சந்திரன் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலையின் மனைவி மற்றும் சசிகாந்த் செந்தில் மனைவியும் ஒன்றாக பிஸ்னஸ் செய்வதாக கூறியிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவிய நிலையில்,  

 

இது தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாசிசத்தை எதிர்க்கும் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக  நான்  அறிவிக்கப்பட்ட நாளில்  இருந்தே சில வலதுசாரி இயக்கங்கள் என்னை குறிவைத்து தாக்குகின்றனர்.

Sasikanth Senthil denied the video that was released in connection with Annamalai KAK

 பொய்யான அவதூறு- நகைச்சுவையாக இருக்கு

2019ல் இதே பாசிச சக்திகளை எதிர்த்து என்னுடைய பதவியை ராஜினாமா செய்த போது இதே மாதிரியான விமர்சனங்களை எதிர் கொண்டேன்.  ஆனால் இன்று என்னுடைய மனைவியையும், என்னுடைய குடும்பத்தாரையும் பற்றி உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பும் ஒரு காணொளியை காண நேர்ந்தது. அதில் கூறப்பட்ட செய்திகள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை.  ஒருவருடைய குடும்பத்தினரை பற்றி பொய்யான அவதூறுகளை பரப்பி அதில் விளம்பரம் தேடுவது சிலருக்கு வழக்கமாகிவிட்டது.

எனது மனைவிக்கு முற்றிலும் அறிமுகமே  இல்லாத  நபர்களை இணைத்து கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவது நகைச்சுவையாக உள்ளது. எத்தனை முயன்றாலும் தமிழகத்தில் முற்போக்கு மற்றும் ஜானநாயக கொள்கைகளை எந்தி பிடிக்கும் திராவிட முன்னேற்ற கழகம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி தமிழகத்தில் இந்த பாராளுமன்ற தேர்தலில் 40/40 தொகுதிகளிலும் வெல்லப்போவது நிச்சயம் என சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

வங்கி கணக்கில் 0 பேலன்ஸ்... குண்டுமணி தங்கம் கூட இல்லை- திருமாவளவனின் சொத்து பட்டியலில் வெளியான ஷாக் தகவல்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios