Asianet News TamilAsianet News Tamil

பரிதாபத்தில் சசிகலாவின் நிலைமை... அந்தரத்தில் அண்ணியார் பிரேமலதா... அமாவாசையாகிப் போன அரசியல்..!

 எடப்பாடியார் சசிகலா- தினகரனை சேர்த்துக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. 
 

Sasikalas condition in misery ... Premalatha in the distance ... Menstruating brother-in-law politics
Author
Tamil Nadu, First Published Feb 12, 2021, 11:23 AM IST

அமாவாசை நாளான நேற்று சசிகலாவை சந்திக்க வரும்படி விடுத்த அழைப்பை தேமுதிக பொருளாளர் பிரேமலதா நிராகரித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியை தொடர, தே.மு.தி.க., தலைமை விரும்புகிறது. ஆனால், அ.தி.மு.க., அலட்டிக் கொள்ளாமல் காலம் கடத்தி வருகிறது. இதனால், விரக்தியில் உள்ள தேமுதிக கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி, கூட்டணி முடிவை அறிவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பா.ம.க.,வுடன் அதிமுக கூட்டணி பேச்சை தொடர்ந்து வருகிறது. பா.ம.க.,விற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா விரக்தி அடைந்துள்ளார்.Sasikalas condition in misery ... Premalatha in the distance ... Menstruating brother-in-law politics

'பொறுமைக்கும் எல்லை உண்டு' என, அ.தி.மு.க.,வை எச்சரித்துள்ளார். இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா, உடல் நலம் பெறவும், அரசியலுக்கு வரவும், பிரேமலதா அழைப்பு விடுத்திருந்தார். பெங்களூரில் இருந்து சென்னை வந்துள்ள சசிகலா, 'அ.தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகள் தன்னை வந்து சந்திப்பர். அதை வைத்து, அரசியல் ஆட்டத்தை துவங்கலாம்' என, கணக்கு போட்டார் பிரேமலதா.

அ.தி.மு.க., தரப்பில் யாரும் அசைந்து கொடுக்கவில்லை. தன் ஆதரவாளர்கள் கருணாஸ், தனியரசு உள்ளிட்டவர்களை சந்திக்க, சசிகலா தேதி கொடுத்துள்ளார். அமாவாசை நேற்று தன்னை வந்து சந்திக்கும்படி, பிரேமலதாவிற்கும் சசிகலா துாது அனுப்பி இருந்தார். சீட் மட்டுமின்றி, கணிசமான தொகையும் தருவதாக உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 Sasikalas condition in misery ... Premalatha in the distance ... Menstruating brother-in-law politics

ஆனால், சசிகலாவின் அழைப்பை, பிரேமலதா நிராகரித்து உள்ளார். கடந்த தேர்தல்களில், முக்கிய கட்சிகளிடம், தே.மு.தி.க., பேரம் நடத்திய தகவல் வெளியானது. இது, அக்கட்சியின் செல்வாக்கை குறைத்தது. அதேபோன்ற நிலை, இப்போதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், சசிகலா அழைப்பை பிரேமலதா நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சசிகலா வந்தவுடன் சந்திப்பார்கள் என கருதப்பட்ட நிலையில் அவர்கள் யாரும் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. எடப்பாடியார் சசிகலா- தினகரனை சேர்த்துக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

 Sasikalas condition in misery ... Premalatha in the distance ... Menstruating brother-in-law politics

இதனையும் மனதில் வைத்தே தேமுதிக பொருளாளர் பிரேமலதா சசிகலா அழைத்தும் சந்திக்க செல்லவில்லை என்கிறனர் அக்கட்சி முக்கிய நிர்வாகிகள்.

Follow Us:
Download App:
  • android
  • ios