Asianet News TamilAsianet News Tamil

புரட்சிப் பயணத்தை மீண்டும் தொடங்கிய சசிகலா..! செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயண தேதி அறிவிப்பு

அதிமுகவை கைப்பற்றும் வகையில் தொண்டர்களை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, வருகிற 9 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sasikala will tour Chengalpattu district on the 9th to meet the volunteers
Author
First Published Jan 4, 2023, 1:03 PM IST

அதிமுக ஒற்றை தலைமை மோதல்

ஜெயலலிதா  மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக எடப்பாடி, ஓபிஎஸ்,டிடிவி தினகரன், சசிகலா என 4 பிரிவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக சந்தித்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி என அடுத்தடுத்த தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அதிமுகவிற்கு தான் தான் தலைமை என எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கமும், ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓ.பன்னீர் செல்வமும் போர் கொடி தூக்கியுள்ளனர். இந்தநிலையில்  அதிமுக மீட்கும் வகையில் தொண்டர்களை சந்திக்க சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுமா..? அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை.?

Sasikala will tour Chengalpattu district on the 9th to meet the volunteers

செங்கல்பட்டில் சுற்றுப்பயணம்

இதன் அடுத்த கட்டமாக புரட்சிப்பயணத்தை வரும் 9 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதியம் 3 மணிக்கு தியாகராய நகர் இல்லத்தில் இருந்து தொடங்கும் சசிகலா,தி.நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக கொளப்பாக்கம் செல்கிறார்.  அங்கிருந்து புரட்சிப்பயணத்தை தொடங்கும் சசிகலா  மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோயில் பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார். சசிகலா மேற்கொள்ளும் புரட்சிப்பயணத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

பாஜகவில் இருந்து ஓட்டம்.! திமுக அழைப்பிற்காக காத்திருப்பு.! கடைசியில் அதிமுகவில் தஞ்சம் அடைந்த டாக்டர் சரவணன்

Follow Us:
Download App:
  • android
  • ios