ஓபிஎஸ் சசிகலா இடையே நீயா நானா என முஷ்டி முறுக்கி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்சி அமைப்பது யார் என்பதை தமிழகத்தின் பல கோடி மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவே ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது.

மொத்த எம்எல்ஏக்கள் - 234

ஆர். கே நகர் (ஜெ. மறைவு) காலியிடம் - 01

கணக்கில் உள்ளது - 233

திமுக - 89

காங் - 8

முஸ்லிம் லீக் - 1

அதிமுக

மொத்தம் - 134

அதிமுக சசிகலா - 128

அதிமுக பன்னீர் - 6

சபாநாயகர் - 1

மேற்கண்ட கணக்கின் படி மேலோட்டமாக பார்த்தால் சசிகலா தரப்புக்கு 128 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது

கவர்னரை சந்தித்து சசிகலா கொடுத்த கடிதத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 134 பேரின் கையெழுத்தும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஓபிஎஸ் போர்க்கொடி தூக்குவதற்க்கு முன்பு பெறப்பட்ட கையெழுத்துகளையே சசிகலா தரப்பு கவர்னரிடம் கொடுத்திருப்பதாக தெரிகிறது.

இந்த விஷயமும் கவர்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் லிஸ்டை சசிகலா கொடுத்த பிறகும் இது முன்பே பெறப்பட்ட கையெழுத்து என்பதால் பெரிதும் குழம்பி போயுள்ளாராம் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

ஒருவேளை சசிகலாவை ஆட்சி அமைக்க அழைத்த பிறகு நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர வேண்டும்.

அப்போது எம்எல்ஏக்கள் மாற்றி ஓட்டு போட்டு விட்டால் கதை கந்தலாகி விடும்.

அதாவது வெறும் 16 எம்எல்ஏக்கள் மட்டும் சசிகலாவுக்கு எதிர்நிலையை கையிலெடுத்து விட்டால் ஆட்சியும் கவிழ்ந்து விடும்.

இப்படி ஸ்திறமற்ற விஷயங்கள் ஏதாவது நடந்து விட்டால் அரசு சம்பிரதாயங்கள் அனைத்தும் வீணாகி போய்விடும் என்பதால் கவர்னர் சற்று நிதானத்தை கடைபிடிப்பதாக கூறபடுகிறது.

ஓபிஎஸ் தரப்பில் மெஜாரிட்டியை நிருபிப்பேன் என நம்பிக்கையோடு தெரிவித்தாலும் 25ல் இருந்து 30 எம்எல்ஏக்களின் ஆதரவுக்கு மேல் கிடைக்காது என கூறப்படுகிறது.

மேலும் ஓபிஎஸ்க்கு திமுக ஆதரவளித்தால் மட்டுமே மீண்டும் முதல்வராக முடியும். ஆனால் இது நடக்குமா என்பது தெரியவில்லை.

சசிகலா தரப்பை பொறுத்தவரை உறுதியாக ஆட்சியை பிடிப்போம் என சொல்வதற்கான காரணங்கள் இதோ...

ஏற்கெனவே 31 அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் எப்படியும் ஓபிஎஸ் பக்கம் வரவே மாட்டார்கள்.

அது மட்டுமின்றி ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் கையில் ஒன்று அல்லது இரண்டு எம்எல்ஏக்களை உறுதியாக பிடித்து வைத்துள்ளனர்.

எம்எல்ஏக்கள் மனம் மாறி விடாதபடி பார்த்து கொள்கின்றனர்.

தற்போது சசிகலா பாக்கெட்டில் உள்ள சுமார் 120 எம்எல்ஏக்கள் சாம, பேத,தான, தண்டம் என அனைத்து வழிகளிலும் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

அதாவது அவர்களுக்கு எந்த குறையுமில்லாமல் பார்த்து கொள்கின்றனர் எஸ்.பி வேலுமணியும், செந்தில் பாலாஜியும்.

சசிகலா சேதமில்லாமல் ஆட்சி பொறுப்பேற்றால் அதற்கு செந்தில் பாலாஜி பெரிய தூணாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

அந்த அளவிற்கு எம்எல்ஏக்களை மனம் கோணாமல் இங்கிருந்தே அவர்கள் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டியதெல்லாம் கொடுத்து ஜெ. இருந்தபோது இருந்த செயல்வீரர் செந்தில் பாலாஜி ஆக மாறி விட்டார்.

இப்படி நெளிவு சுளிவுகளோடு எம்எல்ஏக்களை அவர்கள் கையாள்வதால் அவர்கள் அணி மாறமாட்டார்கள் என கூறப்படுகிறது.

இவ்வளவு உறுதியான காரணங்கள் சசிகலா தரப்பில் இருப்பதால் ஓரிரு நாட்கள் தள்ளிபோனாலும் கூட சசிகலாவே முதல்வர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

அதனால் பெரும் போராட்டத்துக்கு பிறகு முதல்வர் ஆகிறார்.

குறிப்பு : இப்போது குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் இருக்கும் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக விடப்படும்போது அணி மாறாமல் இருக்க வேண்டும் அல்லது அவர்கள் எதிரணியினரால் மூளை சலவை செய்யபடாமல் இருந்தால் மட்டும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும்