கடம்பூர் ஜமீனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மாணிக்க ராஜாவிற்கு சொந்தமானதுதான் இந்த பங்களா. இருபத்தைந்து சென்ட்  நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களாவில் ஐந்து பெட்ரூம்கள், பெரிய ஹால், செம்ம மாடர்னான டைனிங் அறை, நீச்சல் குளம் என ஏகப்பட்ட வசதிகள் இருக்கிறதாம். இந்த மாடர்ன் பங்களாவை மறைத்து பெரிய சுவர் கட்டப்பட்டு இருக்கிறது, இருபத்து நான்கு மணி நேரமும் செக்யூரிட்டிகள் இருப்பதால் யாரும் பங்களாவை நெருங்கிட முடியாதாம். இந்த பங்களாவை கட்டி இருபது வருஷங்களாவது இருக்குமாம். பாதுகாக்கப்பட்ட மற்றும் புலிகள் காப்பக வனப்பகுதியான இங்கே எப்படி இப்படியொரு பங்களாவை கட்ட வனத்துறை அனுமதிச்சதுன்னே தெரியலையாம். 

அ.தி.மு.க. அபிமானி மனிதரின் பங்களாவாக இது இருந்தாலும் கூட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களின் பல கட்சி வி.ஐ.பி.க்கள், கலெக்டர் போன்ற சீனியர் அதிகாரிகள் ஆகியோர் இங்கே அடிக்கடி வந்து ரிலாக்ஸ் செய்து செல்வதால் எந்த ஆட்சி வந்தாலும் பங்களாவுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். 

இப்போது தினகரன் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் முன்பு சசிகலாவின் கணவர் நடராஜன் அடிக்கடி இங்கே வருவாராம். அவரோடு இளம்பெண் செரீனாவும் வந்து போவாராம். நடராஜனை கண்காணிக்க சசிகலா உளவுத்துறையை வைத்திருந்த நிலையில், இந்த காட்டுப் பங்களாவுக்கு இவர்கள் வந்து செல்லும் விஷயம் சசிக்கு தெரிந்திருக்கிறது. ஒரு நாள் நடராஜன் அங்கே  தங்கியிருக்கும் போது சசிகலா போன் போட்டாராம். எடுத்தவர் மாணிக்க ராஜா. போனிலேயே விளாசி எடுத்தவர் பின் சென்னைக்கு வரவைத்து ‘கவனிக்கப்பட்டாராம்’. கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். 

ஆனால் அதன் பிறகும் நடராஜன் உடனான நட்பை மாற்றிக் கொள்ளவில்லையாம் மாணிக்கராஜா. இந்த நிலையில் ஷெரீனா மீது கஞ்சா வழக்கு பாய்ந்தது. அச்சூழலில் ஷெரீனாவுக்கு ஜாமீன் ஃபைல் பண்ணியதே மாணிக்கராஜாதான். முன்பு நடராஜன் வருகையை நிறுத்திய பிறகு தினகரன் சில முறை இங்கு வந்து சென்றிருக்கிறாராம். பின் நீண்ட காலம் இங்கே வருவதை நிறுத்தியவர், சமீபத்தில் மீண்டும் இதை துவக்கியிருக்கிறார்! என்கிறார்கள். 

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதால் இந்த பங்களாவை ஒட்டி மான், மிளா, காட்டுப்பன்றிகளெல்லாம் ரெகுலராக வந்து மேயுமாம். இப்போதெல்லாம் தினகரன் வருகையில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் வருகிறார்களாம். சமீபத்தில் ரிட்டயர்டு ஆன ஒரு பெரிய போலீஸ் அதிகாரியும் வந்தார்! என்று சொல்லி அதிர வைக்கின்றனராம் அந்த பங்களாவின் பணியாளர்கள். 

தினகரன் கூட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். எல்லாம் இங்கே வர்றாங்கன்னா, அப்ப தினகரனுக்கும் அரசாங்கத்துக்கும் நடக்குற சண்டையெல்லாம் ச்சும்மா லூலுலுல்லாயிதானா?
நாமதான் லூஸா!?