sasikala team members proud about thoppi symbol

ஆர்.கே நகர் இடை தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதை அடுத்து, சசிகலா அணிக்கு தொப்பியும், பன்னீர் அணிக்கு இரட்டை மின்கம்பமும் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் தொப்பி அணிந்திருந்ததால், ஆரம்பத்தில் மகிழ்ச்சி அடைந்த சசிகலா அணி, பின்னர் அந்த தொப்பி ஜெய்சங்கர் அணியும் தொப்பி போல இருந்ததால் சற்று அதிருப்தி அடைந்தது.

மறுபக்கம், ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சின்னம் பார்ப்பதற்கு, இருபுறமும் விரிந்து இரட்டை இலை போன்றே காட்சி அளிக்கிறது.

இது சசிகலா தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இரட்டை மின்கம்பம், இரட்டை இலை போல உள்ளது என்பதை மறைக்க இப்போதே சின்னத்தை விமர்சிக்க ஆரம்பித்துள்ளது சசிகலா அணி.

எம்.ஜி.ஆர் அணிந்த தொப்பி. எப்போதும் தலையில் இருக்கும் தொப்பி. வெயில், மழையில் இருந்தது காக்கும் தொப்பி என புகழ்ப்பாட ஆரம்பித்த சசிகலா அணியினர், மறுபக்கம் மின்கம்பத்தை கேலி செய்கின்றனர்.

தொப்பி என்பது எங்கள் தலையில் இருக்கும், ஆனால் கரண்ட் கம்பம் தெருவில் இருக்கும் என்று பெருமையாக பீத்தி கொண்டு வருகின்றனர்.

தொப்பி ஒரு மனிதனுக்குதான் உதவும், ஆனால் ஒரு மின் கம்பம், ஒரு தெருவுக்கே வெளிச்சம் கொடுக்கும் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர் ஓ.பி.எஸ் அணியினர்.