பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கிய விவகாரத்தில், கர்நாடக முன்னாள் அமைச்சர் பரமேஸ்வரின் செயலாளர், சிறைக்குள் சென்று சசிகலாவை சந்தித்தார் என்றும் அவர் மூலமாகவே லஞ்சப்பணம் கைமாறியதாகவும் டிஐஜி ரூபா அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்ட விவகாரத்தை ஆய்வு செய்த டிஐஜி ரூபா, தற்போது ஒவ்வொரு ஊழலையும் தற்போது வெளிக்கொண்டு வருகிறார்.

பொதுவாக சிறையில் உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் அங்குள்ள மருந்துக் கடைகளில் இருந்து மட்டுமே அதுவும் டாக்டரின் அறிவுரைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால்  சசிகலாவுக்கு வெளியில் இருந்து மட்டுமே மருந்து, மாத்திரைகள் வரவழைக்கப்பட்டு அளிக்கப்படுகிறது என ரூபா தெரிவித்தார்.

இதே போல் சசிகலாவுக்குகாக சிறையில் வழங்கப்பட்ட உடையை அவர் இது வரை ஒருநாள் கூட அணிந்ததில்லை என்றும் சுடிதார், புடவை, நைட்டி போன்ற உடைகளையே அவர் பயன்படுத்தி வருகிறார் என்றும் ரூபா கூறியுள்ளார்.

குக்கர், காபி மேக்கர், சூப் செய்யும் பொருட்கள் போன்றவையும், பிரியாணி செய்யத் தேவையான பொருட்களும் சசிகலாவின் அறையில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

சசிகலா சிறைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருத்தாக தனக்கு தகவல் கிடைத்தது என்றும், ஆனால் அவரை எப்படியாவது பிடித்துவிடலாம் என்று நினைத்தகாவும், ஆனால் அவர் தப்பிவிட்டதாகவும் ரூபா தெரிவித்தார்.

இதே போன்று கர்நாடக முன்னாள் அமைச்சர் பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் சிறைக்குள் சென்று சசிகலாவை சந்தித்தாகவும், அவர்  மூலமாகவே பணம் கைமாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களாக பொறி வைத்து இந்த ஆப்ரேஷன் நடைபெற்றதாக தெரிவித்த ரூபா, இது உண்மை என்று நிரூபிக்கப்படால் சசிகலாவுக்கு சிறை தண்டனை மேலும் சில ஆண்டுகள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கல்கள் வெளியாகியுள்ளன.