சட்டப் பேரவையை நோக்கி சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள்…வெற்றி பெறுவாரா எடப்பாடி…
தமிழக சட்டப் பேரவையில் இன்று நடைபெறவுள்ள சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார் .இதில் கலந்து கொள்ள அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கினறனர்.
ஒரு அமைச்சர் காரில் 3 எம்எல்ஏக்கள் வீதம் சென்னைக்கு காரிலேயே கிளம்பியுள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதா என்பதை அறிந்துகொள்ள, சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தாலும் பிப் 18 (இன்று) தனது பெரும்பான்னைமயை நிரூபிக்க தயார் என எடப்பாடி அறிவித்தார்.
இந்நிலையில் இன்ற காலை 11 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
சட்டப்பேரவையில் மொத்தம் 234 இடங்கள் உள்ளன. ஆர்.கே.நகரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மறைந்துவிட்டதால் தற்போது சட்டசபை பலம் 233 ஆக உள்ளது.

இதில் சரிபாதிக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு பெறுபவரே முதலமைச்சராக பொறுப்பேற்க முடியும்.
அதன்படி, குறைந்தபட்சமாக 117 எம்எல்ஏக்கள் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவைப்படுகிறது. அதிமுகவுக்கு தற்போது சபாநாயகர் தனபாலையும் சேர்த்து 135 உறுப்பினர்கள் பலம் உள்ளது.
இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக அவர் ஆளுநரிடம் பட்டியல் அளித்திருந்தார். ஆனால் இன்று காலை கூவத்துரில் இருந்து கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் தப்பிஓடிவிட்டார், அவர் வாக்குப்பதிவை புறக்கணிக்கப் போதாக அறிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணியில் அவர் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அணியிலிருந்து குறைந்தது 7 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக திரும்பினாலும் ஆட்சி கலைய வாய்ப்புள்ளது.
ஒருவேளை ஒரே ஒரு ஓட்டு வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் என்ற நிலை ஏற்படுமானால் அப்போது தனபால் தனது வாக்கை பதிவு செய்யலாம்.அவர் பெரும்பாலும் எடப்பாடிக்கு ஆதரவாகவே வாக்களிப்பார் என தெரிகிறது.
நியமன உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டு போடுவதில்லை ஆனாலும் சபாநாயகர் நினைத்தால் அவரை வாக்களிக்கசெய்ய முடியும்.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி கரையேறுவாரா? இன்றும் 2 மணி நேரத்தில் தெரியும்.
