வாங்க மாப்ளைகளா உங்களுக்கு தயாரா வைத்திருக்கிறோம்…சொந்த ஊர் திரும்பும் எம்எல்ஏக்களுக்கு வரவேற்பு..

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளந்தது. ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வந்தது. ஓபிஎஸ்சிடம் வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தைப் பெற்ற சசிகலா தன்னை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்க வைத்தார்.

பின்னர் அவர் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓபிஎஸ் 11 எம்எல்ஏ க்களுடன் தனி அணியாக செயல்பட்ட நிலையில், சசிகலா தனக்கு ஆதரவான 124 எம்எல்ஏக்களை கடத்திச் சென்று கூவாத்துரில் உள்ள சொகுசு விடுதியில் அடைத்து வைத்துக் கொண்டார்.

ஆனால் சசிகலாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏ க்கள் மிரட்டி வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை தங்களது சொந்த தொகுதிக்கு அனுப்பி பொது மக்களிடம் கருத்து கேட்டுவிட்டு வந்து, அதன் பிறகு முடிவு எடுங்கள் என ஓபிஎஸ் தரப்பினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதைப் போலவே தமிழகம் முழுவதும் பொது மக்கள் சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அவர்கள் ஓபிஎஸ் க்கு ஆதரவு அளிக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களுக்கு எதிராக தொகுதிகளில் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று சசிகலாவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதனிடையே சசிகலாவை ஆதரிக்கும் எம்எல்ஏ வே எங்கள் ஊருக்குள் வராதே என்றும் மீறி வந்தால் எங்கள் காலணிகள் தான் பேசும் எனவும் பல கிராமங்களில் பொது மக்கள் சார்பில் போர்டுகள் வைத்திருந்தனர். அத் அளவுக்கு தங்கள் தொகுதி எம்எல்ஏக்கள் மீது அதிருப்தியில் உள்ளனர்.

அனேகமாக இன்று அல்லது நாளை எம்எல்ஏக்கள் சொந்த தொகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். என்ன பாடுபடப் போகிறார்களோ…