அதிமுக பொதுசெயலாளர் பதவி ஏற்ற இரண்டு நாட்களிளில் கட்சி பணிகளை முழு வீச்சில் ஆரம்பித்து விட்டார் சசிகலா
முதலமைச்சர் பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டும் என்ற கட்சி பிரமுகர்களின் வேண்டுகோள்கள் ஒரு பக்கம் இருப்பினும்.அதிரடி சரவெடியாக தன் கட்சி பணிகளை முடுக்கி விட்டுள்ளார் 
அதன் முதல் கட்டமாக வரும் 4ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 5 நாட்கள் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் 
ஒன்றிய, நகர, பேரூராட்சி,மற்றும்  மாவட்ட செய்யலளர்களும்,பிற அமைப்புகளின் செயலாளர்களும் கலந்துகொள்வார்கள் 
ஜனவரி 4 ஆம் தேதி காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கும் இந்த ஆலோசனை கூட்டம் 9 ஆம் தேதி நிறைவடைகிறது 
ஒவ்வொரு நிர்வாகியையும் தனிப்பட்ட முறையில்  சசிகலாவே சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது
,இதன் மூலம் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சரிக்கட்டிவிட முடியும் என உறுதியாக நம்புகிறதாம் கார்டன் தரப்பு