சரணடைவதற்கு கால அவகாசம் அளிக்க கேட்டு உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துள்சி கோரியதை 20 நொடிகள் கூட கேட்க மறுத்த நீதிபதிகள் உடனடியாக சரணடைய உத்தரவிட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை , 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து 24 மணி நேரத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது. சசிகலா தரப்பில் உடனடியாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் மூலம் உச்சநீதிமன்றத்தில் உடல் நிலையை காரணம் காட்டி ஆஜராவதில் 2 வார கால அவகாசம் கேட்கப்பட்டது.

வாய்மொழியாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு மூத்தவழக்கறிஞர் கே.டி.எஸ். துள்சி வைத்த வாதத்தை 20 நொடிகள் கூட காத்திருக்க தயாராக இல்லாத நீதிபதிகள் உடனடியாக கோரிக்கையை நிராகரித்து , உடனடியாக அவர்கள் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவேண்டும். உடனடியாக தீர்ப்பை மதித்து சரணடைவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதனால் சசிகலாவின் கடைசி வய்ப்பும் அடைக்கப்பட்டது. இனிமேல் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகள் முன்பு தான் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் சிறை செல்வது உறுதியாகி உள்ளது.
