ஜெயலலிதாவின் சகோதரியான சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா அவரது உறவவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோருடன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபட்டுள்ளார். சிறைக்குள் விதிகளுக்கு மாறாக பல்வேறு சொகுசு வசதிகளை அவர் பெற்று வந்ததாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார்.

 


இதனையடுத்து இஅந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதிலும் ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையென தெரிய வந்தது. 
இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக கர்நாடக அரசு அமைத்த ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சிறையின் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டது கர்நாடக சிறைத்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக எல்லைக்கு அருகே இருப்பதால்தான்  இந்த பிரச்னை. எனவே வேறு ஒரு சிறைக்கு மாற்றலாமா என்று கர்நாடக அரசு அலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

வேறு சிறைக்கு மாற்றுவது மூலம் கர்நாடக சிறைத்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை சிறைதளவாவது துடைத்துவிடலாம் என கருதுவதால் கூடிய விரைவில் சிறை மாற்றம் சசிகலாவுக்கு உண்டு என்கிற தகவல் அலையடித்து கிடக்கிறது.