அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என இரு அணிகள் இணைப்புக்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர்  வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார். 

ஜெ மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 

ஜெவிற்கு வழங்கப்பட்ட அனைத்து மரியாதைகளில் சசிகலாவுக்கு சற்றும் குறையவில்லை அமைச்சர்கள் மத்தியில். ஆனால் தனது முதலமைச்சர் பதவியை பிடிங்கிய கோபத்தில் பன்னீர்செல்வம் கட்சியை இரண்டாக உடைத்தார். 

இதைதொடர்ந்து ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் தேவை என கூறி அவருக்கென ஒரு தனி பட்டாளத்தை உருவாக்கினார். இதனால் தொண்டர்கள் மத்தியிலும் அவருக்கு பலத்த வரவேற்பு கொடுத்தனர். 

இதனியையே சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவும் அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் எடப்பாடி தமது தலைமியிலான அரசை பாதுகாத்து கொள்ளவே மும்முரம் காட்டினார். 

இதைதொடர்ந்து துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி தினகரன் எடப்பாடி பதவியை பிடுங்க முற்பட்டதால் பகை முற்றி கொண்டது. 

இதனால் டிடிவியை விட்டு பிரிந்து எடப்பாடி பன்னீரிடம் ஆதரவு கோரினார். அவரது கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். 

ஆனால் சசிகலாவை நீக்கினால் மட்டுமே தலைமை கழகம் வருவோம் என தெரிவித்ததால் ஆமைச்சர்களிடம் பேசி எடப்பாடி முடிவெடுத்தார். மேலும் அமைச்சர்களை  வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். 

பின்னர் எடப்பாடியும் பன்னீரும் கைக்குலுக்கி தலைமை அலுவலகத்தில் இணைப்பை அறிவித்தனர். 

இந்நிலையில், இணைப்பு விழாவில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என  அறிவித்தார்.